5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Postal Jobs: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தபால் துறையில் அட்டகாசமான வேலை.. ரெடியாகுங்க மக்களே!

மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகிறது. இந்திய தபால் துறையில் சுமார் 35 ஆயிரம் காலியடங்களுக்கான மாபெரும் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Postal Jobs: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தபால் துறையில் அட்டகாசமான வேலை.. ரெடியாகுங்க மக்களே!
தபால் துறையில் வேலை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jul 2024 20:34 PM

தபால் துறையில் 35 ஆயிரம் காலி பணியிடங்கள்: மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகிறது. இந்திய தபால் துறையில் சுமார் 35 ஆயிரம் காலியடங்களுக்கான மாபெரும் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களானது.  இதன் மூலம் பிபிஎம் (Branch Post Master), ஏபிபிஎம் (Assistant Branch Postmaster) போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

Also Read: டிப்ளமோ முடித்தவரா? தமிழக அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான ஆயுத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாக வேண்டியது. ஆனால், தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இனி எப்போ வேண்டுமானாலும் வெளியாகலாம். இதனால், அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

10ஆம் வகுப்பு தேர்ச்சி:

இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எனவே, பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தால் நிச்சியமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

தகுதிகள்:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம். சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவருக்கு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

கிராமின் தாக் சேவக் பணியிடத்திற்கு வயது வரம்பானது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊதியம்:

இந்த பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.14,000 வரை வழங்கப்படும். இது தொடர்பாக விவரங்களை https://indiapostgdsonline.gov. என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Also Read: பொதுத்துறை வங்கிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்..

Latest News