5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PM Internship Scheme: மாதம் ரூ.5,000.. இளைஞர்களுக்கு சூப்பரான வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் தொழில் பயற்சி வழங்கப்பட்டு, இதன் மூலம் இளைஞர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, இதற்கான தகுதிகள், ஊக்கத்தொகை  போன்ற விவரங்களை பார்க்கலாம்.

PM Internship Scheme: மாதம் ரூ.5,000.. இளைஞர்களுக்கு சூப்பரான வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் (picture credit: PTI/Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Oct 2024 19:07 PM

நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பல்வேறு நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து, பல திட்டங்களை கொண்டு வந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய அரசு வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்தது. அதாவது பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் (PM Internship Scheme). பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் தொழில் பயற்சி வழங்கப்பட்டு, இதன் மூலம் இளைஞர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.   இந்த நிலையில்,  பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கான தகுதிகள், ஊக்கத்தொகை  போன்ற விவரங்களை பார்க்கலாம்.

தகுதிகள்:

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும். 21 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ITI), பாலிடெக்னிக் நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் (BA, B.Sc., B.Com., BCA, BBA, B.Pharma) பெற்றிருக்க வேண்டும்.

மேலும், ஐஐடிகள், ஐஐஎம்கள், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், ஐஐஎஸ்இஆர், என்ஐடிகள் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. CA, CMA, CS, MBBS, BDS, MBA, PhD அல்லது ஏதேனும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தகுதியற்றவர்கள். ஏதேனும் அரசின் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்திருந்தால் விண்ணப்பிக்க முடியாது.

Also Read: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 3,000 காலிப் பணியிடங்கள்.. உள்ளூரிலே அரசு வேலை!

விண்ணப்பதாரர்கள் முழுநேர வேலையில் ஈடுபடக்கூடாது. குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பெற்றோர் அரசு ஊழியராக இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் ஊக்கத்தொகை:

இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து தேர்வானவர்களுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியின் போது உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும்.

முன்னனி நிறுவனங்களில் தொழிற்பயிற்சி:

மஹிந்திர, மேக்ஸ் லைஃப், டிசிஎஸ், எச்சிஎல், மாருதி சுசுகி, எய்ச்சர் மோட்டார், முத்துட் பைனான்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட 500 முன்னனி நிறுவனங்களில் மாணவர்கள் பயிற்சி பெற முடியும். இதன் மூலம் அந்தந்த நிறுவனங்கள் தகுதியான மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்வார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://pminternship.mca.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் முகப்பு பக்கத்தில் Login என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளீட்டு லாக்கின் செய்து கொள்ள வேண்டும். பின்னர், உங்கள் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து, உங்களுக்கான இன்டர்ன்ஷிப் விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும். இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு (1800 11 6090) அல்லது மின்னஞ்சல் (pminternship[at]mca.gov.in) தொடர்பு கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நபர்கள் கல்விச் சான்றிதழ்கள்,
சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது? குரூப் வாரியாக வெளியீடு.. தேர்வர்களே நோட் பண்ணுங்க!

முக்கிய நாட்கள்:

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்தி திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். இதற்கான பயற்சி வகுப்புகள் டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News