பஞ்சாப் & சிந்த் வங்கியில் பிசியோதெரபிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
Punjab and Sind Bank Recruitment 2024: பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் காலியாகவுள்ள பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Punjab and Sind Bank Recruitment 2024: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி (PSB) பிசியோதெரபிஸ்ட் (Phytotherapist) பதவிக்கு தகுதியானவர்களைத் தேடுகிறது. விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபியில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிசியோதெரபியில் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில், விண்ணப்பதாரர்கள் தொடக்கத்தில் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். இந்த நிலையில், பிசியோதெரபிஸ்ட்டின் செயல்திறன் ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்பு வங்கியால் மதிப்பாய்வு செய்யப்படும்.
அப்போது, பிசியோதெரபிஸ்டின் பணி திருப்திகரமாக இருந்தால், ரிடெய்னர்-ஷிப் அடிப்படையில் மேலும் பணி இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
ரூ.7,200 ஊதியம்
இந்தப் பதவிக்கு விண்ணப்பதாரர்களுக்கு ரூ. மாத ஊதியமாக மாதம் ரூ.7,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஜெய்ப்பூரில் நியமிக்கப்படுவார்கள்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில் பிசியோதெரபிஸ்ட் பணிக்கான இறுதித் தேர்வு நடைபெறும்.
இதையும் படிங்க : Bank Jobs: வங்கியில் வேலை.. மாதம் ரூ.31,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி,
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி
மண்டல அலுவலகம்
30-31 மோகன் டவர்
பிரின்ஸ் சாலை
வித்யுத் நகர்
அஜ்மீர் சாலை
ஜெய்ப்பூர்
அஞ்சல் எண் – 302021
இந்த விண்ணப்பங்களை நவ.16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆவண சரிபார்ப்பின்போது அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ITBP-யில் சப்-இன்ஸ்பெக்டர் பணி.. மாத சம்பளம் ரூ.92 ஆயிரம்.. விண்ணப்பிப்பது எப்படி?