5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hospital Jobs: அரசு மருத்துவமனையில் எக்கச்சக்க வேலை.. 8ஆம் வகுப்பு படித்தாலே போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை கீழ் கண்டவாறு பார்க்கலாம்.

Hospital Jobs: அரசு மருத்துவமனையில் எக்கச்சக்க வேலை.. 8ஆம் வகுப்பு படித்தாலே போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!
மருத்துவமனையில் வேலை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Sep 2024 20:51 PM

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது சுகாதாரத்துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகிறது. சுகாதார நிலையங்களில் அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் வெளியாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில், தற்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை கீழ் கண்டவாறு பார்க்கலாம்.

பணி விவரம்:

ராமநாதபுரம் மற்றும பரமக்குடி சுகாதார மாவட்ட அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், நல்வார்வு மையங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. அதன்படி, டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், பிளாக் டோட் எண்டரி ஆப்ரேட்டர் ஆகிய பணிக்கு தலா ஒரு இடமும், இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு 21 பணியிடங்களும், MTM – சுகாதார ஆய்வாளர் பணிக்கு 13 இடங்களும், MMU – தூய்மை பணியாளர், MMU ஓட்டுநர் பணிக்கு தலா 2 இடங்களும், பிசியோதெரபிஸ்ட் பணிக்கு ஒரு இடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஜெர்மனியில் செம்ம வேலை.. செவிலியர்களுக்கு இலவச விசா, டிக்கெட்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

கல்வித்தகுதி:

  • டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும், கணிணி திறமையாக கையாளும் திறன் இருக்க வேண்டும்.
  • இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு GNM/BSC Nursing படிப்பை முடித்திருக்க வேண்டும். சிறிது காலம் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • சுகாதார ஆய்வாளர் பணிக்கு 2 ஆண்டுகள் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், 10ஆம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
  • தூய்மை பணியாளர், ஓட்டுநர் பணிகளுக்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • பிசியோதெரபிஸ்ட் பணிக்கு இளநிலை பிசியோதெரபிஸ்ட் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது விவரம்:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.13,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாக் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணிக்கு 13,500 ரூபாயும், இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு 18,000 ரூபாயும், சுகாதார ஆய்வாளர் பணிக்கு 14,000 ரூபாயும், தூய்மை பணியாளர் பணிக்கு 8,500 ரூபாயும், ஓட்டுநர் பணிக்கு 13,500 ரூபாயும், பிசியோதெரபிஸ்ட் பணிக்கு 13,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும் வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு செய்யப்படும் முறை குறித்து அறிவிப்பில் குறிப்பிடவில்லை. இருப்பினும்,  உங்களுக்கு தகுதியும், விருப்பமும் இருந்தால் விண்ணப்பித்து பாருங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், ராமநாதபுரம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். முகவரி மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Also Read: 10ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாதம் ரூ.70,000 சம்பளம்.. சூப்பரான வேலை!

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 24.09.2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள். அதன்பின், வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News