Railway Jobs 2024: +2 தேர்ச்சி போதும்.. மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம்.. ரயில்வேயில் அட்டகாசமான வேலை!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாகவும் ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன. இந்த நிலையில், ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,558 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது.
ரயில்வே துறையில் வேலை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாகவும் ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன. இந்த நிலையில், ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,558 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியன் ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அடுத்த மாதம் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? தகுதிகள் என்ன? போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பணி விவரம்:
சீப் கமர்ஷியல், டிக்கெட் மேற்பார்வையாளர் (Ticket Commercial, Ticket Supervisor) பணிக்கு 1,735 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர் (Station Master) பணிக்கு 994 இடங்கள் காலியாக உள்ளன. சரக்கு ரயில் மேலாளர் (Goods Train Manager) பணிக்கு 3,144 இடங்கள், ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் (Typist) பணிக்கு 1,057 பணியிடங்களும், சீனியர் ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் (Typist) டைப்பிஸ்ட் பணிக்கு 732 பணியிடங்களும், கமர்ஷியல் டிக்கெட் கிளார்க் பணிக்கு 2,022 பணியிடங்களும், கணக்கு எழுத்தர் தட்டச்சர் (Account clerk) பணிக்கு 361 பணிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணியிடங்களில் சீனியர் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் சூப்பர் வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், டைபிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது விவரம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுகிறது.
சம்பளம்:
சீப் கமர்ஷியல், டிக்கெட் மேற்பார்வையாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.35,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு 35,400 ரூபாயும், சரக்கு ரயில் மேலாளர் பணிக்கு 29,200 ரூபாயும், ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் பணிக்கு 19,900 ரூபாயும், சினியர் கிளார்க், டைப்பிஸ்ட் பணிக்கு ரூ.29,200, கமரஷியல் டிக்கெட் கிளார்க் பணிக்கு 21,700 ரூபாயும், அக்கவுண்ட் கிளார்க் பணிக்கு 19,900 ரூபாயும், ரயில் கிளார்க் பணிக்கு 19,900 ரூபாயும் மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்வது எப்படி?
மேற்கண்ட பணியிடங்களுக்கு முதல்நிலையாக கணினி தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வாவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணியிடங்களுக்கு என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
Also Read: சென்னையில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எங்கெங்கு தெரியுமா? முழு லிஸ்ட்!
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாக பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விண்ணப்பிக்க அக்டேபார் 13ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.