5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

10ம் வகுப்பு முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 4,660 காலிப் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!

Railway Recruitment: ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மே 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 4,660 காலிப் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 05 May 2024 09:36 AM

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் மே 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

  • உதவி காவல் ஆய்வாளர் – 452
  • காவலர் – 4208

மொத்த பணியிடங்கள் – 4,660

கல்வித்தகுதி:

உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். காவலர் பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். காவலர் பணிக்கு 18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். இதில், அரசு விதிகளின்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகுளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

மாத சம்பளம்:

உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,400 வழங்கப்படுகிறது. காவலர் பணிக்கு மாத சம்பளமாகரூ.21,700 வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிகளுக்கு கணினி வழித் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரி பார்ப்பு மூலம் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோர் 250 ரூபாயும், மற்றவர்கள் 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

மேற்கண்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க 14.05.2024 கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.