RRB Recruitment 2024: ரயில்வேயில் அட்டகாசமான வேலை.. 7,951 காலி பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
Railway Jobs: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாகவும் ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது 7,951 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரயில்வேயில் வேலை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாகவும் ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது 7,951 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கெமிக்கல் சூப்பர்வைசர், ஜூனியர் இன்ஜினியர், மெட்டர்லர்ஜிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை கீழ் கண்டவாறு பார்க்கலாம்.
பணி விவரங்கள்:
- கெமிக்கல் சூப்பர்வைசர்/ஆராய்ச்சி மற்றும உலோகவியல் மேற்பார்வையாளர்/ஆராய்ச்சி – 13 பணியிடங்கள்
- ஜூனியர் இன்ஜினியர், டிப்போட் மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல், மெட்டலர்ஜிக்கல் உதவியாளர் – 7934 பணியிடங்கள்
மொத்தம் 7,951 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். டெபோ மெட்டிரியல் கண்காணிப்பாளர் பணிக்கு டிப்ளமோ, பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும். கெமிக்கல், மெட்டலர்ஜிக்கல் பணியிடத்திற்கு இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்கள் கொண்ட பட்டப்படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது விவரம்:
மேற்கண்டு பணியிடங்களுக்கு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுகிறது.
சம்பளம்:
கெமிக்கல் சூப்பர்வைசர்/ஆராய்ச்சி மற்றும உலோகவியல் மேற்பார்வையாளர்/ஆராய்ச்சி பணியிடத்திற்கு தேர்வாகுபவர்களுக்கு மாத சம்பளமாக ஆரம்பத்தில் ரூ.44,900 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் இன்ஜினியர், டிப்போட் மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல், மெட்டலர்ஜிக்கல் உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக 35,400 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடத்திற்கு ஆன்லைனில் தேர்வு நடைபெறும். தேர்வி மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் பொது பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பின்பு ரூ.400 ரிட்டன் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். தேர்வுக்கு பிறகு ரூ.250 ரிட்டன் செய்யப்படும்.
முக்கிய நாட்கள்:
- மேற்கண்ட பணியிடங்களுக்கு 30.07.24 முதல் விண்ணப்பித்து கொள்ளலாம்.
- விண்ணப்பிக்க கடைசி நாள் 29.08.24
- விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 29.08.24
- விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள 30.08.24 முதல் 08.09.24 வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
Also Read: அரசு வேலை.. 654 காலி பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!