5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

RRC Railway Recruitment 2024: 12ஆம் வகுப்பு தேர்ச்சியா? உடனை அப்ளை பண்ணுங்க.. நாளை தான் கடைசி நாள்!

Railway Jobs: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாகவும் ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன. இந்த நிலையில் 2,424 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRC Railway Recruitment 2024: 12ஆம் வகுப்பு தேர்ச்சியா?  உடனை அப்ளை பண்ணுங்க.. நாளை தான் கடைசி நாள்!
ரயில்வேயில் வேலை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 11 Aug 2024 07:42 AM

நாளை கடைசி நாள்: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாகவும் ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன. இந்த நிலையில் 2,424 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது, அப்ரண்டீஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாட்கள் மட்டும் இருப்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணி விவரம் குறித்த கூடுதல் விவரங்களை கீழே பார்க்கலாம்.

பணி விவரம்:

அப்ரண்டீஸ் பணிக்கு மொத்தம் 2,424 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்டர் (கேஸ், எலக்ட்ரிக்), டர்னடர், ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், கணினி இயக்குபவர், மெஷினிஸ்ட், மெக்கானிக், கார்பெண்டர், புரோகிராமிங் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. அதன்படி, எஸ்சி, மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 10, 12ஆம் வகுப்பின் மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் சராசரியை எடுத்து தயாரிக்கப்படும் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. பயிற்சி அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒரு வருடம் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் (EWS), ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு/இன்டர்நெட் பேங்கிங்/எஸ்பிஐ சலான் போன்றவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பதாரர்கள் முதலில் https://rrccr.com/Home/Home என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அங்கு முகப்பு பக்கத்தில் Click here to Apply Online என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
  • அதில் உங்கள் Resgister ID மற்றும் Password-ஐ உள்ளீட்டு Login செய்து கொள்ள வேண்டும்.
  • ஒருவேளை நீங்கள் புதிய விண்ணப்பதாரர்களாக இருந்தால் Click Here To Register என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் உள்ளீட்டு Login செய்து கொள்ள வேண்டும்.
  • இதன்பிறகு பணி தொடர்பாக கேட்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிட்டு விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட வேண்டும்.

முக்கிய தேதி: இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நாளை (12.08.2024) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Latest News