Bank Jobs: டிகிரி முடித்தவரா? எஸ்பிஐ வங்கியில் வேலை.. 13,735 காலிப்பணியிடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க!
SBI Clerk Recruitment 2024 : பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் தெரிந்தவர்கள், டிகிரி முடித்தவர்கள் தாரளமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பிற்கு பல லட்சம் பேர் ஆண்டுதோறும் காத்திருப்பார்கள். அந்த வகையில், பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் (SBI Clerk Recruitment) காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதவது அதன்படி எஸ்பிஐ வங்கியில் மொத்தம் 13, 735 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் Customer Support & Sales பிரிவில் Junior Associate பணிக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியில் Customer Support & Sales பிரிவில் Junior Associate பதவியில் 13,735 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இததில் தமிழ்நாட்டில் மட்டும் 336 காலிப்பணியிடக்ஙள நிரப்பப்படுகிறது. அதேபோல, புதுச்சேரியில் 4 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் எஸ்சி பிரிவில் 63, எஸ்டி பிரிவில் 2, பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 91, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 33, பொதுப் பிரிவில் 150 இடங்கள் நிரப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
மேற்கண்ட பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டில் இருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களின் பட்டப்படிப்பு முடிவும் தேதி டிசம்பர் 31ஆம் தேதியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வயது விவரம்
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.04.24 தேதியின்படி 20 வயதிற்குள் மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 28 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.04.1996 முன்பும் 01.04.2004 பின்பும் பிறந்திருக்க கூடாது. இதில் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வரையும் தளர்வு அளிக்கப்படுகிறது.
Also Read : 8ஆம் வகுப்பு தேர்ச்சியா? அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, மொழித் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக நடைபெறும் முதல்நிலை தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 200 மதிப்பெண்களுக்கு முதன்மை தேர்வு நடைபெறும். பின்பு, அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப மொழி தேர்வு நடைபெறும். தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் மற்றும் நேரம் 1 மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு https://sbi.co.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பொது/ஓபிசி/EWS பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.750 செலுத்த வேண்டும். SC/ ST/ PwBD/ XS/DXS வகை விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.
Also Read : அறநிலையத்துறையில் வேலை.. மாதம் ரூ.60,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
முக்கிய தேதிகள்
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜனவரி 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு முதல்நிலை தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.