5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bank Jobs: 1,497 காலிப் பணியிடங்கள்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. உடனே செக் பண்ணுங்க!

SBI Recruitment 2024: பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 1,497 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.

Bank Jobs: 1,497 காலிப் பணியிடங்கள்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. உடனே செக் பண்ணுங்க!
எஸ்பிஐ வங்கி
umabarkavi-k
Umabarkavi K | Published: 28 Sep 2024 12:04 PM

நாடு முழுவதும் பல்வேறு அரசு சார்ந்த வங்கிகள், தனியார் வங்கிகள் இயங்கி வருகிறது. இந்த வங்கிகளில் அவ்வப்போது காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். வங்கியின் இந்த அறிவிப்புகளுக்கு இளைஞர்கள் முதல் பலரும் ஆண்டுதோறும் காத்திருப்பார்கள். அந்த வகையில் தற்போது பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ-யில் வங்கியில் கைநிறைய சம்பளத்துடன் ஆயிரக்கணக்காணோர் வேலை பார்த்து வருகின்றனர். ‘

இந்த நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 1,497 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.

பணி விவரம்:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 1,497 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெபியூட்டி மேனேஜர் (Project Management & Delivery) பணிக்கு 187 இடங்களும், டெபியூட்டி மேனேஜர் (Infra Support & Cloud Operation) பணிக்கு 412 இடங்களும், டெபியூட்டி மேனேஜர் (Network Operations) பணிக்கு 80 இடங்களும், டெபியூட்டி மேனேஜர் (IT Architect) பணிக்கு 27 இடங்களும், டெபியூட்டி மேனேஜர் (Information security) பணிக்கு 7 இடங்களும், உதவி மேலாளர் (systems) பணிக்கு 784 இடங்கள் காலியாக இருப்பதாகவும் இதனை நிரப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: டிகிரி போதும்… வங்கியில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு அந்தந்த பணிக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி மாறுப்படும். ஆனால், பொதுவாக B.Tech/B.E அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பணியிடங்களுக்கு குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். அதே வேளையில் உதவி மேலாளர் பணிக்கு டிகிரி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தது 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், உதவி மேலாளர் பணிக்கு மட்டும் 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

டெபியூட்டி மேனேஜர் பணிக்கு ரூ.65,820 முதல் ரூ.93,960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர் பணிக்கு ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

டெபியூட்டி மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களை கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைனில் கலந்துரையாடல் நடக்கும். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள். உதவி மேலாளர் பணிக்கு ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும். 100 மதிப்பெண்களில் கேள்விகள் கேட்கப்படும். இந்த எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முகப்பு பக்கத்தில் Careers என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களுக்கு தகுதியுள்ள பணிகளை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து உங்கள் இமெயில் பேன்ற விவரங்களை உள்ளீட்டு register செய்து கொள்ள வேண்டும். அதன்பின் உங்களுக்கு விண்ணப்ப படிவம் தோன்றும். அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், EWS பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் பாக்கிங் மூலம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. சென்னையில் சூப்பரான வேலை.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

முக்கிய தேதிகள்:

இப்பணிகளுக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு தேதி போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News