5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SDAT Recruitment: மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம்.. தமிழக அரசின் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்டபாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடத்திற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDAT Recruitment: மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம்.. தமிழக அரசின் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?
அரசு வேலை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Jul 2024 18:34 PM

தமிழக அரசின் சூப்பர் வேலை: தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்டபாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடத்திற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் பணிக்கான வருமானம், வயது வரம்பு, படிப்பு உள்ளிட்ட விவரங்களை கீழ் கண்டவாறு பார்க்கலாம்.

பணி விவரம்:

ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் (Sports Physiotherapist)

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தியா அல்லது வெளிநாடுகளில் முதுகலை பிசியோதெரபி, ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். 10, 12, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் என்ற முறையில் படித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: அடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கெல்லாம் தெரியுமா?

வயது விவரம்:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, பொது பிரிவனர் 32 வயதுக்கும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 57 ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு மாத ஊதியமாக ரூ.35,900 முதல் ரூ.1,13,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டு பயிற்சி காலமாக (probationary period) இருக்கும். அதற்கு பிறகே பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடத்திற்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் என எதாவது ஒரு அடையாளம் அட்டை, 10,12வது மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், இளங்கலை, முதுகலை சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 29 ஆகும்.

முகவரி:

The Member Secretary,
Sports Development Authority of Tamilnadu,
Jawaharlal Nehru Stadium
Raja Muthaiah Road, Periyamet,
Chennai – 600 003

Also Read: வீட்டிற்கு மின் இணைப்பு பெற கஷ்டமா இருக்கா? இனி கவலை வேண்டாம்.. மின்வாரியம் செம்ம முடிவு!

Latest News