Bank Jobs: டிகிரி முடித்தவரா? ரூ. 1 லட்சம் வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!
SIDBI Bank Recruitment : இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI Bank) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்க்கலாம்.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI Bank) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி என்பது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் நிதி உதவியை செய்வதை இதன் நோக்கமாகும். இந்த வங்கியில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள கிரேடு ஏ மற்றும் பி பணியிடங்களை நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்க்கலாம்.
பணி விவரம்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் மற்றும் மேலாளர் பணி நிரப்பப்படுகிறது. அதன்படி, கிரேடு ஏ பிரிவில் உதவி மேலாளர் பணிக்கு 50 இடங்களும், கிரேடு பி பிரிவில் மேலாளர் பணிக்கு 22 இடங்கள் என மொத்தம் 72 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகம்/பொருளாதாரம்/கணிதம்/வணிக நிர்வாகம்/பொறியியல் ஆகிய பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும், 2 ஆண்டுகள் பணி அனுபவமும் இருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read : ஐ.டி.ஐ, டிப்ளமோ கல்வித் தகுதி.. இந்திய விமானப் படையில் அப்ரெண்டிஸ் பணிக்கு அழைப்பு!
வயது வரம்பு
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 08.11.1994 முன்பும், 09.11.2003 பின்பும் பிறந்திருக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மேலாளர் பணிக்கு 25 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, பழங்குடி, பட்டியலின பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
சம்பளம்
உதவி மேலாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் மேலாளர் பணிக்கு ரூ.1.15 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட பணிகளுக்கு மூன்று கட்ட தேர்வுகள் நடத்தப்படும். மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு நேர்காணல் அழைக்கப்படுவார்கள். அதன்பிற்கு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் முகப்பு பக்கத்தில் SIDBI Recruitment என்ற க்ளிக் செய்தால் விண்ணப்ப படிவம் இருக்கும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,100 செலுத்த வேண்டும். பட்டியலின, பழங்குடி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read : ITBP-யில் சப்-இன்ஸ்பெக்டர் பணி.. மாத சம்பளம் ரூ.92 ஆயிரம்.. விண்ணப்பிப்பது எப்படி?
முக்கிய தேதிகள்
மேற்கண்ட பணிக்கு டிசம்பர் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் முதற்கட்ட தேர்வு டிசம்பவர் 22, இரண்டாம் கட்ட தேர்வு ஜனவரி 19, நேர்காணல் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.