பெண்களுக்கு அரசு வேலை.. கல்வித்தகுதி இல்லை.. மாதம் ரூ.15,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் உள்ள பெண்கள் உதவி எண் அழைப்பு மையம் சமூக பாதுகாப்பு இயக்குநரகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பெண்களுக்கு அரசு வேலை.. கல்வித்தகுதி இல்லை.. மாதம் ரூ.15,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!

தமிழக அரசு வேலை

Updated On: 

03 Nov 2024 14:10 PM

தமிழ்நாட்டில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் 181 என்ற  பெண்கள் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்களுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைப்பது, தகவல்கள் வழங்குவது, பெண்களுக்கான உதவிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பெண்கள் உதவி எண் அழைப்பு மையம் சமூக பாதுகாப்பு இயக்குநரகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பணி விவரம்:

சென்னையில் உள்ள பெண்கள் உதவி எண் அழைப்பு மையம் சமூக பாதுகாப்பு இயக்குநரகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு 5 இடங்களும், பல்துறை பணியாளர் பணிக்கு 2 இடங்களும், இரவு நேர பாதுகாவலர் பணிக்கு 3 இடங்களும் என மொத்தம் 10 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

இந்த பணிக்கு ஒரு வருடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு முற்றிலும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : சிஏ படிப்பவரா? அரசு தரும் இலவச பயிற்சி.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வயது வரம்பு

சென்னையில் உள்ள பெண்கள் உதவி எண் அழைப்பு மையம் சமூக பாதுகாப்பு இயக்குநரகத்தில் கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பல்துறை பணியாளர் பணிக்கு 55 வயதிற்குள் இருக்க வேண்டும். இரவு நேர பாதுகாவலர் பணிக்கு 55 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு சமூக பணி, சமூக அறிவியல், உளவியல், பொது நிர்வாகம் ஆகிய படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பல்துறை பணியாளர் பணிக்கு கல்வித்தகுதி எதுவும் இல்லை.

மேலும், சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும். முன் அனுபவமும் இருக்க வேண்டும். பாதுகாப்பு காவலர் பணிக்கும் கல்வித்தகுதி தேவையில்லை. சென்னையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் ராணுவத்தில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு ரூ.16,500 சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பல்துறை பணியாளர் பணிக்கு ரூ.15,000, இரவு நேர பாதுகாவலர் பணிக்கு ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிக்கு கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் https://www.tn.gov.in/job_opportunity என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தபால் வழியாக அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : டிகிரி போதும்.. மாதம் ரூ.80,000 சம்பளம்… வங்கியில் சூப்பரான வேலை!

முக்கிய தேதிகள்

மேற்கண்ட பணிக்கு நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!