5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SSC CGL Recruitment 2024: டிகிரி முடிச்சாச்சா? 17,000 காலி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்க!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் SSC நிரப்பி வருகிறது. இந்த நிலையில், 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் குரூப் பி, குரூப் சி ஆகிய பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வித்தகுதி என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

SSC CGL Recruitment 2024: டிகிரி முடிச்சாச்சா? 17,000 காலி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்க!
வேலைவாய்ப்பு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 Jun 2024 16:11 PM

மத்திய அரசு வேலை: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் SSC நிரப்பி வருகிறது. இந்த நிலையில், 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் குரூப் பி, குரூப் சி ஆகிய பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வித்தகுதி என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம். மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய அரசு துறைகளில் இருக்கும் குரூப் பி, சி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 17,727 பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அடுத்த மாதம் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

பணி விவரம்:

குரூப் பி பதவிகள்:

  • Assistant Audit Officer
  • Assistant Accounts Officer
  • Assistant Section Officer
  • Inspector of Income Tax
  • Inspector (CGST & Central Excise)
  • Inspector (Preventive Officer)
  • Inspector (Examiner)
  • Sub Inspector
  • Inspector Posts
  • Inspector (Central bureau Narcotics)
  • Excutive Assistant
  • Research Assistant
  • Divisional Accountant

குரூப் சி பதவிகள்:

  • Postal Assistant
  • Auditor
  • Accountant/Junior Accountant
  • Senior Secretariat Assistant/ Upper Division Clerks
  • Tax Assistant
  • Sub Inspector
  • Senior Administrative Assistant

வெளியான அறிவிப்பின்படி, மொத்தமாக 17,727 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 27 வயதுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம்தோறும் ரூ.44,900 முதல் 1,42,400, ரூ.35,400 முதல் ரூ.1,12,400, ரூ.29,200 முதல் ரூ.92,300 மற்றும் ரூ.25,000 முதல் ரூ.81,00 என பணியிடங்களுக்கு ஏற்ப வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் https://ssc.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு முகப்பு பக்கத்தில் இருக்கும் Apply ஆப்ஷனை கிளிக் செய்யவும்
  • முதல் முறை விண்ணப்பிப்போர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தபின் உங்களது ஐடியை ரெஜிஸ்டர் செய்யவும்.
  • பின்னர், லாகின் செய்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்:

 

இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவ பணியாளர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்ற லிக்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்ப கட்டணம் செலுத்த 25.07.24 இரவு 11 மணி வரை அவகாசம் உள்ளது. 10.08.24 முதல் 11.08.24 வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். முதல் நிலை கணினி செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடைபெறும். இரண்டாம் நிலை கணினி தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நீட் மறுதேர்வை எழுதாத 750 மாணவர்கள்.. அதிர்ச்சி கொடுத்த தேசிய தேர்வு முகமை!