5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SSC GD Recruitment: 10ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாதம் ரூ.69,000 சம்பளம்.. ஈஸியா அப்ளை பண்ணலாம்.. செக் பண்ணுங்க!

Constable jobs: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும். மத்திய அரசு பணியிடங்கள் குறித்த தகவலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது மத்திய பாதுகாப்பு படையில் உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SSC GD Recruitment: 10ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாதம் ரூ.69,000 சம்பளம்.. ஈஸியா அப்ளை பண்ணலாம்.. செக் பண்ணுங்க!
மத்திய அரசு வேலை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Sep 2024 13:27 PM

 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும். மத்திய அரசு வேலைக்காக ஆயிரக்கணக்காணோர் படித்து தேர்வு எழுதி வருகின்றனர். மத்திய அரசின் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புக்காக ஆண்டுதோறும் பலரும் காத்திருக்கின்றனர். மத்திய அரசு பணியிடங்கள் குறித்த தகவலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது மத்திய பாதுகாப்பு படையில் உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான விவரங்களை கீழ்கண்டவாறு பார்க்கலாம்.

பணி விவரம்:

மத்திய பாதுகாப்பு படையில் உள்ள காவலர் பணிக்கு மொத்தம் 39,481 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், என்சிபி உள்ளிட்ட படை பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எல்லை பாதுகாப்பு பமையில் ஆண்கள் 13,306 காலி இடங்களும், பெண்களுக்கு 2,348 இடங்கள் என மொத்தம் 15,654 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், சிஐஎஸ்எஃப் பிரிவில் 7,145 இடங்களும், சிஆர்பிஎஃப் பிரிவில் 11,541 இடங்களும், எஸ்எஸ்பி பிரிவில் 819 இடங்களும், ஐடிபிஎஃப் பிரிவில் 3,017 இடங்களும், ஏஆர் துறையில் 1,248 இடங்கள், எஸ்எஸ்எஃப் பிரிவல் 35 இடங்களும், என்சிபி பிரிவில் 22 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, 02.10.2002ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களும், 01.01.2007ஆம் ஆண்டு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிக்களிப்டி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, பட்டியிலன, பழங்குடி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் படை வீரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படுகிறது.

மாத சம்பளம்:

சிப்பாய் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். இதர காவலர் பணிகளுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். இதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வுக்கு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் Login என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மெயில் ஐடி போன்ற விவரங்களை உள்ளீட்டு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். இதன்பிற்கு விண்ணப்ப படிவம் தோன்றும். அதில் உள்ள கல்வித்தகுதிகள் போன்ற விவரங்களை விண்ணப்ப படிவத்தில் உள்ளீட்டு புகைப்படம், கையொபத்தினை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி submit செய்யவும். விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் படை வீரர்களுக்கு கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: டிகிரி போதும்… வங்கியில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்க கடைசி நாள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க வரும் 14.10.2024 கடைசி நாள் ஆகும். தேர்வு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News