5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சவூதி அரேபியாவில் நர்ஸ் ஆக பணிபுரிய விருப்பமா? இது உங்களுக்குதான்!

Staff Nurse wanted in Saudi: சவூதி அரேபியாவில் நர்ஸ் ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க நவ.30, 2024 கடைசி தேதி ஆகும்.

சவூதி அரேபியாவில் நர்ஸ் ஆக பணிபுரிய விருப்பமா? இது உங்களுக்குதான்!
சவூதி அரேபியாவில் நர்ஸ் ஆக பணிபுரிய வாய்ப்பு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 20 Nov 2024 16:43 PM

சவூதி அரேபியா நாட்டில் தீக்காயங்கள், தீவிர சிகிச்சை பிரிவு (CCU), டயாலிசிஸ், அவசர அறை (ER), ICU (வயது வந்தோர்), NICU (புதிதாகப் பிறந்த தீவிர சிகிச்சை பிரிவு), புற்றுநோயியல், அறுவை சிகிச்சை அறை (OR), PICU (குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு) உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளில் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு நவ.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், பணிக்கான சம்பள விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்தப் பணிக்கு நேர்முகத் தேர்வு, கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் நர்சிங்கில் பி.எஸ்.சி அல்லது பி.எஸ்.சி-க்கு ஈடான கல்வித் தகுதி மற்றும் அந்தந்த சிறப்புப் பிரிவுகளில் குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க : டெல்லி ஐ.ஐ.டி.யில் ஆங்கில ஆசிரியர் பணிக்கு அழைப்பு: விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ!

நேர்காணல்

இந்தப் பணிக்களுக்கான நேர்காணல் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள், சுகாதார நிபுணர்களுக்கான சவுதி கமிஷனின் தொழில்முறை வகைப்பாடு வைத்திருக்க வேண்டும்.
மேலும், மனித வள சான்றளிப்பு மற்றும் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், நேர்காணலின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் முன்பு எஸ்.ஏ.எம்.ஆர் (SAMR) போர்ட்டலில் பதிவு செய்திருக்கக் கூடாது. தொடர்ந்து, விண்ணப்பங்களில் விரிவான பயோ டேட்டா, கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், பணி அனுபவச் சான்று, பாஸ்போர்ட் மற்றும் பிற தேவையான ஆவணங்கள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான norkaroots.org மற்றும் nifl.norka roots.org மூலம் நவம்பர் 30, 2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ITBP-யில் சப்-இன்ஸ்பெக்டர் பணி.. மாத சம்பளம் ரூ.92 ஆயிரம்.. விண்ணப்பிப்பது எப்படி?

Latest News