TN Govt Jobs: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், தூய்மை பணியாளர்கள், இரவுக் காவலருடன் கூடிய தூய்மை பணியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில், தற்போது தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், தூய்மை பணியாளர்கள், இரவுக் காவலருடன் கூடிய தூய்மை பணியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எனவே, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.
பணி விவரம்:
தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள ட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், தூய்மை பணியாளர்கள், இரவுக் காவலருடன் கூடிய தூய்மை பணியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஓட்டுநர் பணிக்கு 2 இடங்களும், அலுவலக உதவியாளர் பணிக்கு 18 இடங்களும், இரவுக்காவலர் 2 இடங்களும், தூய்மை பணியாளர் பணிக்கு 2 இடங்களும், இரவுக் காவலருடன் கூடிய தூய்மை பணியாளர் பணிக்கு ஒரு இடங்களும் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி:
ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக்காவலர், தூய்மை பணியாளர், இரவுக் காவலருடன் கூடிய தூய்மை பணியாளர் பணிகளுக்கு தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வு முடிவுகள் வெளியானது.. இணையதளம் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?
வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக 32 வயது இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி, பிற்படுத்தப்படட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 வயது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியின பிரிவினருக்கு 37 வயது, ஆதரவற்ற விதவை (அனைத்து பிரிவினருக்கு) 37 வயது, மாற்றுத்திறனாளிகளுக்க்கு 10 ஆண்டுகள் உச்ச வயது வரம்பு தளர்வு அளிக்கப்படுகிறது.
சம்பள விவரம்:
ஓட்டுநர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15,700 முதல் 58,100 வரையும், இரவுக்காவலர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரையும், தூய்மை பணியாளர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரையும், இரவுக் காவலருடன் கூடிய தூய்மை பணியாளர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரையும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் முலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் பணிகளுக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read : ஜெர்மனியில் செவிலியர் வேலை.. அரசு தரும் இலவச மொழி பயிற்சி.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிகளுக்கு என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி தபால் மூலம் சரியான முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்,
தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீடு தீர்ப்பாயம், 2ஆம் தளம்,
மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், உயர்நீதிமன்ற வளாகம்,
சென்னை – 104.
என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 11ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பித்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.