TN Govt Jobs: 8ஆம் வகுப்பு தேர்ச்சியா? அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
Vellore Hospital Recruitment : வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மருத்துவ அலுவலர் முதல் தூய்மை பணியாளர் வரை மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, மருத்துவ அலுவலர், ஒப்பந்த செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், ஆதரவு ஊழியர், ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருத்துவ வழங்குநர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், சித்த ஆலோசகர், சிகிச்சை உதவியாளர், அரசு வேலூர் மருதத்துவ கல்லூரி மருத்துவமனை பல் தொழில்நுட்ப வல்லுநர், இயன்முறை மருத்துவர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் என மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி:
பல் மருத்துவ உதவியாளர், பல்நோக்கு பணியாளர், சமையல்காரர் ஆகிய பணிகளுக்கு 10, 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் எனவும், மருத்துவமனை உதவியாளர், பாதுகாப்பு காவலர், தூய்மை பணியாளர் ஆகிய பணிக்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதர பணிகளுக்கு அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு, டிப்ளமோ ஆகிய படித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதியை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்ய பார்க்கவும்.
Also Read : அறநிலையத்துறையில் வேலை.. மாதம் ரூ.60,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வயது வரம்பு
மேற்கண்ட பணிகளுக்கான வயது வரம்பு குறித்து எந்த ஒரு தகவலும் அறிவிப்பில் குறிப்பிடவில்லை. எனவே, உங்களது கல்வித்தகுதிக்கு ஏற்ப பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
மாத சம்பளம்
பல் மருத்துவ பணிக்கு ரூ.34,500, பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ.13,800, ஆய்வக டெக்னீஷியன் பணிக்கு ரூ.13,000, ஆயுஷ் மருத்துவ அலுவலர் பணிக்கு ரூ.34,000, மருத்துவ வழங்குநர் பணிக்கு ரூ.15,000, ஆயுஷ் மருத்துவர் பணிக்கு ரூ.40,000, பல்துறை மருத்துவமனை உதவியாளர் பணிக்கு ரூ.8,500 மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சை உதவியாளர் பணிக்கு ரூ.13,000, மருத்துவ அதிகாரி பணிக்கு ரூ.14,000, செவிலியர் பணிக்கு ரூ.18,000, சுகாதார ஆய்வாளர் பணிக்கு ரூ.14,000, மருந்தாளர் பணிக்கு ரூ.15,000, தூய்மை பணியாளர் பணிக்கு ரூ.8,500, சமையல்காரர் பணிக்கு ரூ.8,5000 மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பணிகளுக்கான சம்பள விவரங்களை அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட பணிகளுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு தகுதியானர்கள் நேர்காணம் மூலம் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். மேலும், பணிநிரந்தரம் தொடர்பாக எந்த உத்திரவாதமும் வழங்கப்படாது என்றும் பணியில் சேருவதற்கு நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணியிடங்களுக்கு https://vellore.nic.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை சரியாக முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்ப படிவத்துடன் கேட்கப்பட்ட சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டும்.
Also Read : டிகிரி முடித்தவரா? 760 காலிப் பணியிடங்கள்.. தமிழக அரசு வேலை!
அனுப்ப வேண்டிய முகவரி
செயற்செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், B பிளாக்,
மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி,
வேலூர் மாவட்டம் – 632 009
மேற்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் ஜனவரி 16ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சந்தேகம் இருந்தால் 0416-2252025 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.