TN Govt Hospital Jobs: 8ம் வகுப்பு படித்தவரா? மாதம் ரூ.30,000 வரை சம்பளம்.. அரசு மருத்துவமனையில் சூப்பரா வேலை!
Namakkal Jobs: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.
பணி விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, மருத்துவ அலுவலர் பணிக்கு 4 இடங்களும், ஆடியோலஜிட் மற்றும ஸ்பீச் தெரபிஸ்ட், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், தரவு மேலாளர்/கணினி ஆய்வாளர், தாய்சேய் நல அலுவலர், செவிலியர் (பள்ளி சிறார் நலவாழ்வு திட்டம்), கணக்கு உதவியாளர், வட்டார கணக்கு உதவியாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர், மருத்துவமனை பணியாளர், தூய்மை பணியாளர், பாதுகாப்பு காவலர் ஆகிய பணியிடங்களில் தலா ஒர காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செவிலியர் (நகர சுகாதார நலவாழ்வு மையம்) பணிக்கு 3 இடங்களும், வட்டார புள்ள விபர பதிவாளர் பணிக்கு 2 இடங்களும் , ஓட்டுநர் (நடமாடும் மருத்துவக்குழு) 2 இடங்களும், மருத்துவமனை பணியாளர் பணிக்கு 4 இடங்களும் என மொத்தம் 27 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: 10ஆம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.25,000 சம்பளம்.. உள்ளூரிலே அரசு வேலை!
கல்வித்தகுதி:
பாதுகாப்பு காவலர், தூய்மை பணியாளர், மருத்துவமனை பணியாளர், கிளீனர், ஓட்டுநர், மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு மட்டும் கூடுதலாக ஓட்டுநர் உரிமம் மற்றும் தமிழகத்தில் செல்லப்படியாகும் பொது சேவை பேட்ஜ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ அலுவலர் பணிக்கு எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும். மேலும், மருத்துவராக பதிவு செய்திருக்க வேண்டும். பதவிக்கு ஏற்ற பிரிவில் டிகிரி பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மாத சம்பளம்:
ஓட்டுநர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.13,500, கிளீனர், மருத்துவமனை பணியாளர், தூய்மை பணியாளர், பாதுகாப்பு காவலர் பணிகளுககு மாத சம்பளமாக ரூ.8,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை பணியாளர் பணிக்கு 10,000, வட்டார புள்ளி விபர பதிவாளர் ரூ,13,500, பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு ரூ.14,000, வட்டார கணக்கு உதவியாளர் பணிக்கு ரூ.16,000, கணக்கு உதவியாளர் பணிக்கு ரூ.16,000, செவிலியர் பணிக்கு ரூ.18,000, தாய்சேய் நல அலுவலர் பணிக்கு ரூ.19,000 தர மேலாளர் பணிக்கு ரூ.20,000, தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ரூ.21,000, ஆடியோலஜிட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு ரூ.23,000, மருத்துவ அலுவலர் ரூ.60,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
01.09.2024 தேதியின்படி, செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். கணக்கு உதவியாளர், வட்டார புள்ளி விபர பதிவாளர் பணிக்கு 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு அதிகபடியாக 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
மருத்துவ அலுவலர் பணியை தவிர இதர அனைத்து பதவிகளுக்கும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவச் சான்று, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Also Read: மாதம் ரூ.5,000.. இளைஞர்களுக்கு சூப்பரான வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்
நிர்வாக செயலாள
மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
நாமக்கல் மாவட்டம் – 637 003
என்ற முகவரிக்கு 28.10.2024 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.