TN Goverment Jobs: மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
TN MRB Phsiotherapist Recruitment: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் வாரியம் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிசியோரெபிஸ்ட் கிரேட் 2 பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. இந்த பணிகள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் வாரியம் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிசியோரெபிஸ்ட் கிரேட் 2 பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. இந்த பணிகள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடத்திற்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.
பணி விவரம்:
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் வாரியம் மூலம் பிசியோரெபிஸ்ட் கிரேட் 2 பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் 16 இடங்கள், பிசி பிரிவில் 12 இடங்கள், பிசிஎம் பிரிவில் 2, எம்பிசி/பிஎன்சி பிரிவில் 9, எஸ்சி பிரிவில் 7 இடங்கள், எஸ்சிஏ பிரிவில் ஒரு இடங்கள் என மொத்தம் 47 இடங்கள் நிரப்பப்படுகின்றன
கல்வித்தகுதி:
மேற்கண்ட பிசியோதெரபிஸ்ட் கிரேட் 2 பணிக்கு பிசியோதெரபி பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read; ஜெர்மனியில் செவிலியர் வேலை.. அரசு தரும் இலவச மொழி பயிற்சி.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
சம்பளம் விவரம்
மேற்கண்ட பணிக்கு பிசியோதெரபிஸ்ட் நிலை 15-இன் படி மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயது வரை இருக்க வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 59 வயது வரை இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணிளுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வு சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ற இணைதயளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, டிஏபி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மற்றவர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.35,000 சம்பளம்.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?
முக்கிய நாட்கள்
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.