Madurai Jobs: அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.35,000 சம்பளம்.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?
TN Public Health Department Recruitment: மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட புகையிலை தடுப்பு அலகு மற்றும் மாவட்ட தடுப்பு மருந்து கிடங்கில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட புகையிலை தடுப்பு அலகு மற்றும் மாவட்ட தடுப்பு மருந்து கிடங்கில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. எனவே, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இதற்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.
பணி விவரம்:
மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட புகையிலை தடுப்பு அலகு மற்றும் மாவட்ட தடுப்பு மருந்து கிடங்கில் உள்ள மாவட்ட ஆலோசகர், தடுப்பூசி குளிப்தன் மேலாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி:
மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் மாவட்ட ஆலோசகர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Public Health or Social sciences or management அல்லது அது சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்திருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் அனுபவம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி குளிர்பதன் மேலாளர் பணிக்கு Business Administration/ Public health computer application/ hospital management/social/sciences/ material management/ supply chain management/ Refrigerator/ AC repair ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: மாதம் ரூ.25,000 சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
மாத சம்பளம்:
மாவட்ட ஆலோசகர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.35,000 வழங்கப்படும். தடுப்பூசி குளிர்பதன மேலாளர் பணிக்கு ரூ.23,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்:
இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது என்றும் எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் சேருவவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். விண்ணப்பங்கள நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ/ மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்கு https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். பிறப்புச்சான்று, 10,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், இருப்பிட சான்று, முன் அனுபவச் சான்று, சிறப்பு தகுதிக்கான சான்று உள்ளிட்டவற்றை விண்ணப்ப படிவத்துடன் அனுப்ப வேண்டும்.
Also Read: காலி பணியிடங்களில் முன்னாள் ஊழியர்கள்.. ரயில்வே முடிவுக்கு பெருகும் எதிர்ப்பு!
அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
விஸ்வநாதபுரம், மதுரை – 625 0114
என்ற முகவரிக்கு வரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.