5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ration Shop Jobs : ரேசன் கடைகளில் 3,000 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. உடனே பாருங்க!

TN Ration Shop Recruitment: தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்ககளில் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. ரேசன் கடைகளில் 3,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்.

Ration Shop Jobs : ரேசன் கடைகளில் 3,000 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. உடனே பாருங்க!
ரேசன் கடை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Nov 2024 10:26 AM

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்ககளில் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில முழுவதும் 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அட்டை திட்டம் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ரேசன் கடைகளில் 3,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. மேலும், விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு இன்றே கடைசி நாளாகும்.

பணி விவரம்:

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்ககளில் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப்படுகின்றன.  தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் (salesman), கட்டுநர்கள் (packers) பதிவுகளுக்கு நேரடி நியமனம் செய்யப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் சுமார் 3,308 பேர் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.  சென்னையில் 348 இடங்களும், கோவையில் 199 இடங்களும், செங்கல்பட்டில் 184 இடங்களும், மதுரையில் 106 இடங்களும், உள்ளிட்ட 38 மாவட்டங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

Also Read : டிகிரி முடித்தவரா? வங்கியில் வேலை.. கை நிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

கல்வித்தகுதி:

நியாய விலைக் கடையில் விற்பனையாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நியாய விலைக் கடையில் கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இரண்டு பணிகளுக்கும் தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்கவும் போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டது.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தொகுப்பு ஊதியமாக நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை ரூ.6,250 வழங்கப்படும், ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் 29,000 வரை வழங்கப்படும். எனவும், நியாய விலைக் கடையில் கட்டுநர் பணிக்கு தொகுப்பு ஊதியமாக நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை ரூ.5,500 வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் 26,000 வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.2024-அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியிர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை. அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு 50 வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிக்கு கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணிகளுக்கு https://drbchn.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். Direct Recruitment Bureau என்பதை உள்ளீட்டு மாவட்ட பெயரை போட்டு இணையத்தில் தேடினால் உங்களுக்கான விண்ணப்பம் கிடைக்கும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

Also Read : ஜனவரியில் முதல்வர் மருந்தகம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

விண்ணப்ப கட்டணம்

விற்பனை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150, கட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

கடைசி வாய்ப்பு

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 07.11.2024 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Latest News