5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

8ஆம் வகுப்பு தேர்ச்சியே போதும்! மாவட்ட நீதிமன்றங்களில் வேலை…மாதம் ரூ.71,000 வரை சம்பளம்!

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

8ஆம் வகுப்பு தேர்ச்சியே போதும்! மாவட்ட நீதிமன்றங்களில் வேலை…மாதம் ரூ.71,000 வரை சம்பளம்!
நீதிமன்றம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Apr 2024 13:53 PM

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அலுவலக பணியாளர், காவலர், பன்முக உதவியாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட 2,323 காலி பணியிடங்கள் நிரப்படுகின்றனர். எனவே, இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, ஊதியம் உள்ளிட்ட விவரங்களை காணலாம்.

பணி விவரம்:

பரிசோதகர் – 60

வாசிப்பாளர் – 11

செயல்முறை எழுத்தாளர் – 01

ஜெராக்ஸ் ஆபரேட்டர் – 53

ஓட்டுநர் – 27

அலுவலக உதவியாளர் – 638

காவலர்/இரவுக் காவலர் – 459

பன்முக உதவியாளர் – 402

இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 242

தூய்மை பணியாளர் – 202

முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 100

தூய்மை பணியாளர் – 202

நகலெடுப்பவர் வருகையாளர் – 16

தோட்ட பணியாளர் – 12

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். பரிசோதகர், வாசிப்பாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், செயல்முறை எழுத்தாளர் பணிக்கு கட்டாயம் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்பிடிப்பு முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், காவலர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழில் எழுதபடிக்க தெரிந்தால் போதும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு 01.07.24 தேதிப்படி 18 வயது பூர்த்தியானவர்களும் 32 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 37 வயதுக்குள் இருக்கலாம்.

சம்பள விவரம்:

ஓட்டுநர், பரிசோதகர், வாசிப்பாளர் பணிகளுக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வழங்கப்படுகிறது. செயல்முறை எழுத்தாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணிகளுக்கு ரூ.19,000 முதல் 69,900 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

அலுவலக உதவியாளர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வழங்கப்படுகிறது.

காவலர்/இரவுக் காவலர், பன்முக உதவியாளர், தூய்மை பணியாளர், நகலெடுப்பவர் வருகையாளர், தோட்ட பணியாளர் பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login
என்ற லிக்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக பணியிடங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் மே 27ஆம் தேதி ஆகும்.