TN Govt Hospital Jobs: மாதம் ரூ.25,000 சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

Tirunelveli Jobs: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்துறை கீழ் திருநெல்வேலி மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

TN Govt Hospital Jobs: மாதம் ரூ.25,000 சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

மருத்துவமனை

Updated On: 

20 Oct 2024 10:21 AM

திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்துறை கீழ் திருநெல்வேலி மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் விவரம் போன்றவற்றை பார்க்கலாம்.

பணி விவரம்:

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் ஹோமியோபதி மருந்தாளர் பணிக்கு 2 பணியிடங்களும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் ஆகிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் ஆயுஸ் மருந்தாளர்கள் பணிக்கு 2 பணியிடங்கள், யோகா Instructor பணிக்கு 2 இடங்களும், நுண்கதிர்வீச்சாளர் பணிக்கு 2 இடங்களும் நிரப்பப்படுகின்றனர்.

மேலும், யுனானி மருத்துவர் பணிக்கு 1 இடங்களும், யுனானி மருந்தாளர் பணிக்கு ஒரு இடங்களும் நிரப்பப்படுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவிலில் சித்தா மருந்தாளர்கள் பணிக்கு 2 இடங்களும் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: காலி பணியிடங்களில் முன்னாள் ஊழியர்கள்.. ரயில்வே முடிவுக்கு பெருகும் எதிர்ப்பு!

சம்பளம்:

ஹோமியோபதி மருந்தாளர் பணிக்கு மாத சம்பளம் ரூ.11,360, ஆயுஷ் மருந்தாளர் பணிக்கு ரூ.10,500, நுண்கதிர்வீச்சாளர் பணிக்கு ரூ.50,000, யோக Instructor பணிக்கு ரூ.1,000, யுனானி மருத்துவர் பணிக்கு ரூ.21,000, யுனானி மருந்தாளுநர் பணிக்கு ரூ.11,360, சித்தா மருந்தாளுநர் பணிக்கு ரூ.11,360 மாத சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

மருத்தாளுநர் பணிக்கு ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதா/ஒருங்கிணைந்த பட்டய மருந்தாளுநர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நுண்கதிர்வீச்சாளர் பணிக்கு நுணகதிர்நுட்பநர் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். யோக Instructor பணிக்கு BNYS மற்றும் சித்தா மருந்தாளுநர் பதவிக்கு BUMS ஆகிய படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

இந்த பணிகள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. பணி நியமனத்தில் எந்தவித முன்னுரிமையும் கோர முடியாது. எந்த நிலையிலும் பணிநீக்கம் செய்யப்படலாம். மேற்கண்ட அனைத்து நியமனங்களும் 11 மாத ஒப்பந்த காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் மூலம்  தேர்வு செய்யப்படலாம். இருப்பினும், தேர்வு முறை குறித்த எந்த  தகவலும் அறிவிப்பில் குறிப்பிடவில்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் https://tirunelveli.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

Also Read: ஓட்டுநர் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!

அனுப்ப வேண்டிய முகவரி

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர்,
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம்
எண்: 141-D, 6வது குறுக்குத் தெரு, மகாராஜ நகர்,
பாளையங்கோட்டை, நெல்லை – 11

என்ற முகவரிக்கு அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!