5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Govt Jobs: தமிழக அரசு வேலை.. மாதம் ரூ.30,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

TN Food Safety Department Recruitment: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Govt Jobs: தமிழக அரசு வேலை.. மாதம் ரூ.30,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அரசு வேலை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Nov 2024 18:19 PM

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் காலியாக பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் திட்டமிடல் மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பவளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பணி விவரம்

உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ திட்டமிடல் மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவில் உள்ள system analyst cum data manager  பணிக்கு இரண்டு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Also Read: ஐ.டி.பி.ஐ வங்கியில் அக்ரி ஆபீஸர் பணி.. விண்ணப்பித்து விட்டீர்களா?

கல்வித்தகுதி

மேற்கண்ட பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு, கணினி அறிவியல், மல்டி மீடியா, மக்கள் தொடர்பியில், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சென்னையில் குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இந்த பணியிடத்திற்கு 60 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் விவரம்

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இப்பணி தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 11 மாதங்கள் பணியில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://foodsafety.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடம் குறித்த அறிவிப்பை பார்க்க  இதை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Also Read : 8ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழக அரசே வழங்கும் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி.. உடனே அப்ளை பண்ணுங்க!

அனுப்ப வேண்டிய முகவரி

Commissionerate Of Food Safety,
1st and 2nd floor, old fisheries building,
DMKS Campus,
359, Anna Salai, Teynampet,
Chennai – 600 006

என்ற முகவரிக்கு நவம்பர் 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News