TN Govt Jobs: மாதம் ரூ.18,000 சம்பளம்.. உள்ளூரிலே பெண்களுக்கு அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
Tirunelveli Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்வாதார மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி/பேரூராட்சி பகுதியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு பல திட்டங்களையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் மூலம் குடும்ப பெண்கள், மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் அவ்ரகளுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்வாதார மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி/பேரூராட்சி பகுதியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளளது.
இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.
பணி விவரம்:
தேசிய நகர்ப்புற இயக்க திட்டத்தின்கீழ் திருநெல்வேலி இயக்க மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும், ஒருங்கிணைந்த பெண்கள் மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதன்படி, சமூதாய அமைப்பாளர் (நகர்ப்புற வாழ்வாதார மையம்) பணிக்கு ஒரு இடங்களும், வழக்கு பணியாளர் பணிக்கு ஒரு இடங்களும், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 2 இடங்களும், பாதுகாப்பு காவலர் பணிக்கு 4 இடங்களும் நிரப்பப்படுகின்றன. இதில் சமுதாய அமைப்பாளர், வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: தமிழில் எழுத படிக்க தெரியுமா? அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க!
கல்வித்தகுதி:
சமூதாய அமைப்பாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த பெண்கள் மையத்தில் உள்ள வழக்கு பணியாளர் பணிக்கு social work, sociology, criminology, psychology ஆகிய பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
துறை சார்ந்ததில் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும். பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சமைக்க தெரிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு காவலர் பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வயது விவரம்:
சமூதாய அமைப்பாளர் பணிக்கு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 அன்றுடன் பெண்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளுக்கு வயது விவரம் எதுவும் அறிவிப்பில் குறிப்பிடவில்லை.
வருமானம்:
ஒருங்கிணந்த பெண்கள் மையத்தில் உள்ள வழக்கு பணியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படுகிறது. மேலும், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 10,000 ரூபாயும், பாதுகாப்பு காவலர் பணிக்கு 12,000 ரூபாயும் மாத சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்வார்கள். இந்த முற்றிலும் தற்காலிகமான வேலை மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: 89 காலிப் பணியிடங்கள்.. சென்னை மாநகராட்சியில் அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க!
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
சமூதாய அமைப்பாளர் பணிக்கு மேலாளர்,
நகர்ப்புற வாழ்வாதார மையம்,
பூமாலை வணிக வளாகம்,
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம்,
திருநெல்வேலி.
தொலைப்பேசி எண் – 9342682297
ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையம் பணிக்கு
மாவட்ட சமூக நல அலுவலகம்,
ஒருங்கிணைந்த சேவை மையம்,
திருநெல்வேலி (வள்ளியூர்).
மேற்கொண்ட முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். சமூதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10.10.2024-க்குள் விண்ணப்ப படிவத்தை உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையம் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2024-க்குள் விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.