5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Japanese Language: மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. தமிழக அரசு தரும் சூப்பர் வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

ஜப்பான் நாட்டில் தமிழர்கள் வேலை செய்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கு ஜப்பான் மொழிய கற்றுத் தர தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்காக மூன்று மாத 3 இலவச பயிற்சியை வழங்க உள்ளது. எனவே, இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் என்ன போன்ற விவரங்களை பார்ப்போம்.

Japanese Language: மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. தமிழக அரசு தரும் சூப்பர் வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!
நான் முதல்வன் திட்டம்
umabarkavi-k
Umabarkavi K | Published: 11 Oct 2024 12:09 PM

தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் பள்ளி முடித்த மாணவர், மாணவிகள் பொருளாதார தடையின்றி மேற்படிப்பை படித்து வருகின்றனர். மேலும், கல்லூரியில் படிக்கும்போதே வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் ‘நான் முதல்வன் திட்டம்’. இந்தி திட்டத்தின் மூலம் கல்லூரி முதல் வேலைவாய்ப்பு வரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு இல்லாமல் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. மேலும், போட்டித் தேர்வுகள் எழுதம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் நாட்டில் தமிழர்கள் வேலை செய்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கு ஜப்பான் மொழிய கற்றுத் தர தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்காக மூன்று மாத 3 இலவச பயிற்சியை வழங்க உள்ளது. எனவே, இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் என்ன போன்ற விவரங்களை பார்ப்போம்.

Also Read: தேர்வே கிடையாது.. உள்ளூரிலே அரசு வேலை.. ரூ.30,000 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

ஜப்பானில் வேலைவாய்ப்புகள்:

அமெரிக்கா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எண்ணற்ற மக்கள் வேலைக்கு செல்கின்றனர். இதில் ஜப்பானில் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், வேலை வாய்ப்புகள் இருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் எலெக்ட்ரிக்கல், எலெட்ரானிக்ஸ், செமிகன்டக்கர், மெக்கானிக்கல், ஏஐ, எம்.எல். ஹோட்டல் மேனேஜ்மெண்ட், நர்சிங் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்சிகள் தேவைப்படுகின்றனர். இதற்காக சரியான ஊதியமும் வழங்குகிறது. இதற்கு பொறியில் படித்து முடித்தவர்கள் வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு ஜப்பானில் மாத சம்பளம் 3 முதல் 6 மடங்கு அதிகமாக இருக்கும். இன்ஜினியரிங் பணிகளுக்கு வருடத்தில் சுமார் ரூ.21 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். மேலும் இன்ஜினியரிங் அல்லாத பணிகளுக்கு வருடத்திற்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

ஜப்பானில் வேலை செய்ய தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் வேலைக்கு செல்வதற்கு ஏதுவாக அந்நாட்டு மொழியை கற்றுக் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் இலவசமாக கற்றுக் கொடுக்க உள்ளது. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாடு கழகம் மற்றும் techno smile india இணைந்து இந்த வகுப்பு நடத்த உள்ளனர். ஜப்பான் மொழி கற்பதற்கு எதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

Also Read: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது? குரூப் வாரியாக வெளியீடு.. தேர்வர்களே நோட் பண்ணுங்க!

விண்ணப்பிப்பது எப்படி?

டிசம்பர் மாதத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. முற்றிலும் இலவசமாக 3 மாதத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தினந்தோறும் 2 மணி நேரம் என வாரத்தில் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeQbhsdAOXydQLVtHkZjgVpnWnszG90L8FmrgaZ0KLxxg836Q/viewform என்ற கூகுள் form-ஐ க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் கேட்கப்பட்ட விவரங்கள் சரியாக பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

 

Latest News