TN Govt Jobs: டிகிரி முடித்தவரா? உள்ளூரிலேயே அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Data Entry Jobs: தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்பணியிடத்திற்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்க்கலாம்.

TN Govt Jobs: டிகிரி முடித்தவரா? உள்ளூரிலேயே அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

அரசு வேலை

Published: 

13 Nov 2024 13:47 PM

தமிழக அரசு துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். இந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்பணியிடத்திற்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பணி விவரம்

தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார தரவு உள்ளிட்டாளர் பணிக்கு இரண்டு இடங்களை நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார தரவு உள்ளிட்டாளர் பணிக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்பிடிப்பு அல்லது கணினி பயன்பாடு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அரசு வேலை வேண்டுமா? – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. என்னென்ன பணிகள் தெரியுமா?

சம்பள விவரம்

மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ.13,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. மேலும், எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தம் செய்யப்படாது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்று, மதிப்பெண் சான்று நகலை சேர்த்து அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க: தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. அரசு தரும் மாதம் ரூ.5,000… தகுதிகள் என்ன?

அனுப்ப வேண்டிய முகவரி

கௌரவ செயலாளர், துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.

மேற்கண்ட முகவரிக்கு 20.11.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?