TN Govt Jobs: அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.20,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TN Hospital Recruitment 2024: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 5 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் மாவட்ட வாரியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அவ்வப்போதும் வெளியாகும். இந்த நிலையில், தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.
பணி விவரம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வக நுட்புநர் நிலை பணிக்கு ஒரு இடங்களும், இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணிக்கு 3 இடங்களும், பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு ஒரு இடங்களும் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி
ஆய்வக நுட்புநர் பணிக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆய்வக தொழில்நுட்பத்தில் ஒரு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணிக்கு செவிலியர் பணிக்கு செவிலியர் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு உயிரியியல் அல்லது தாவரவியியல் மற்றும் விலங்கியியல் உள்ளிட்ட பாடங்ள் கொண்டு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இரண்டு ஆண்டு பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர்/தூய்மை ஆய்வாளர் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read : பி.எஸ்.எஃப் ஆட்சேர்ப்பு 2024.. வெளியான அதிரடி மாற்றங்கள்!
வயது விவரம்
ஆய்வக நுட்புநர் நிலை பணிக்கு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இடைநலை சுகாதாரப் பணியாளர் பணிக்கு அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம். பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாத சம்பளம்
ஆய்வக நுட்புநர் நிலை பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.13,000, இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு ரூ.18,000, பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு ரூ.14,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யவார்கள். எந்த ஒரு காலத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலமோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read : 2030க்குள் 11 கோடி வேலை வாய்ப்புகள்.. அள்ளிக்கொடுக்கும் கூட்டுறவு துறை!
அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
தூத்துக்குடி மாவட்டம் 628002.
என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.