TN Govt Jobs: தமிழில் எழுத படிக்க தெரியுமா? அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க! - Tamil News | tamilnadu public health deparment recruitment 2024 25 vacancy of Tuticorin district health department check the details tamil news | TV9 Tamil

TN Govt Jobs: தமிழில் எழுத படிக்க தெரியுமா? அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க!

Updated On: 

26 Sep 2024 12:58 PM

TN Public Health Deparment Recruitment: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் விவரம் போன்றவற்றை காணலாம்.

TN Govt Jobs: தமிழில் எழுத படிக்க தெரியுமா? அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க... உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக அரசு வேலை

Follow Us On

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி, ஆயுஷ் மருத்துவ அலுவலர், ஓமியோபதி மருத்துவ அலுவலர், சித்த மருத்துவ பணியாளர், யோகா மருத்துவ பிரிவு பணியாளர் என 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் விவரம் போன்றவற்றை காணலாம்.

பணி விவரம்:

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி, ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி மருத்துவ பிரிவு), பல்நோக்கு பணியாளர் (யுனானி மருத்துவ பிரிவு), காலவர் ஆகிய பணிகிளுக்கு ஒரு இடங்களும், மருத்துவ அலுவலர் (ஓமியோபதி மருத்துவப் பிரிவு), பல்நோக்கு பணியாளர் (ஆயுர்வேத மருத்துவ பிரிவு), பல்நோக்கு பணியாளர் (ஒமியோபதி மருத்துவ பிரிவு), ANM/UHM ஆகிய பணிகளுக்கு தலா இரண்டு இடங்களும், பல்நோக்கு பணியாளர் (யோகா மருத்துவப் பிரிவு) பணிக்கு 3 இடங்களும், நுண்கதிர் வீச்சாளர் பணிக்கு 4 இடங்களும், பல்நோக்கு பணியாளர் (சித்த மருத்துவப் பிரிவு) பணிக்கு 7 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதி:

மருத்துவ அலுவலர் பதவிக்கு இளங்கலை மருத்துவப் படிப்பு முடித்திருக்க வேண்டும். நுண்கதிர் வீச்சாளர் பதவிக்கு 12ஆம் வகுப்பு மற்றும் Radiological Assitant சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். பல்நோக்கு பணியாளர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ANM/UHN பணிக்கு Auxiliary Nurse Midwife/Multi Purpose Health Worker சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். காலவர் பணிக்கும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியிருக்கீங்களா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே பாருங்க!

சம்பளம்:

மருத்துவ பணியாளர் பணிக்கு ரூ.34,000 மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்கதிர் வீச்சாளர் பணிக்கு 10,000 ரூபாயும், பல்நோக்கு பணியாளர் பணிக்கு நாளொன்றுக்கு 300 ரூபாயும், ANM/UHN பணிக்கு 14,000 ரூபாயும், காவலர் பணிக்கு 8,500 ரூபாயும் மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கு அதிகபட்சம் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். நுண்கதிர் வீச்சாளர் பதவிக்கு பழங்குடி, பட்டியலின பிரிவினருக்கு 37, பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 34, பொதுப் பிரிவினருக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல்நோக்கு பணியாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்க வேண்டும். காவலர் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணி நியமனத்திற்கான ஒப்பந்தப்பத்திரம் அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கல்வித்தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 89 காலிப் பணியிடங்கள்.. சென்னை மாநகராட்சியில் அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

முகவரி:

நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாப்பிள்ளைபூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
தூத்துக்குடி – 628002

மேற்கண்ட முகவரிக்கு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version