TN Goverment Jobs: டிகிரி முடித்தவரா? ரூ.70,000 சம்பளம்.. தமிழக சுற்றுலாத் துறையில் அட்டகாசமான வேலை!

Tamilnadu Tourism Recruitment: தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் பொறியியல் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் காலியாக உள்ள 26 காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 1 ஆண்டிற்கு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்காக தகுதி, சம்பளம், விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை பார்ப்போம்.

TN Goverment Jobs: டிகிரி முடித்தவரா? ரூ.70,000 சம்பளம்.. தமிழக சுற்றுலாத் துறையில் அட்டகாசமான வேலை!

தமிழக அரசு

Updated On: 

17 Oct 2024 14:17 PM

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். கல்வி, நிதி, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் காலியான இடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்காக தகுதி, சம்பளம், விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை பார்ப்போம்.

பணி விவரம்:

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் பொறியியல் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் காலியாக உள்ள 26 காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 1 ஆண்டிற்கு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அசிஸ்டண்ட் ஜென்ரல் மேனேஜர் (digital Marketing Tourism Promotion), நிகழ்வு மேலாளர் (Madurai), அசோசியேட் (IT Monitoring) ஆகிய பணிகளுக்கு ஒரு இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனியர் அசோசியேட் (Project Formulation) பணிக்கு 2 இடங்களும், ஆர்கிடெக், ஆசாசியேட் (Digital Marketing), சீனியர் அசோசியேட் (Events and Venues) ஆகிய பணிகளுக்கு 3 இடங்கள் நிரப்பப்படுகின்றன. பயிற்சியாளர் (Intern Civil Engineering), சைட் இன்ஜினியரிங் ஆகிய பணிகளுக்கு 4 இடங்கள் என மொத்தம் 26 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

Also Read: வேலை இல்லையா? அரசு தரும் ரூ.7200 உதவித்தொகை.. மிஸ் பண்ணாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!

கல்வித்தகுதி:

அசிஸ்டண்ட் ஜென்ரல் மேனேர், அசோசியேட், சீனியர் அசோசியேட் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதோனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். அசிஸ்டண்ட் ஜென்ரல் மேனேர் பணிக்கு 5 ஆண்டுகளும், சீனியர் அசோசியேட் பணிக்கு 4 ஆண்டுகளும், அசோசியேட் பணிக்கு 2 ஆண்டுகளும் அனுபவம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நிகழ்வு மேலாளர் பணிக்கு டிகிரி மற்றும் 4 ஆண்டுகள் ஆனுவம் வேண்டும். அசோசியேட் (IT Monitoring) பணிக்கு பி.இ கணிணி அறிவியல்/ஐடி அல்லது கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும்.

மேலும், 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். சீனியர் அசோசியேட் (Project Formulation) பணிக்கு சுற்றுலா, விருந்தோம்பல் மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதோடு, 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். ஆர்கிடெக் பணிக்கு கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதோடு, 4 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். சைட் இன்ஜினியரிங்க பணிக்கு சிவில் அல்லது எலெக்ட்ரிக் பிரிவில் பொறியியல் படித்திருப்பதோடு, 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பளம்:

அசிஸ்டண்ட் ஜென்ரல் மேனேர் பணிக்கு மாதம் ரூ.70,000 முதல் ரூ.1 லட்சம், அசோசியேட் ரூ.20,000 முதல் ரூ.40,000, சீனியர் அசோசியேட் ரூ.25,000 முதல் ரூ.40,000, நிகழ்வு மேலாளர் பணிக்கு ரூ.50,000 முதல் ரூ.70,000, அசோசியேட் (IT Monitoring) பணிக்கு ரூ.20,000 முதல் ரூ.40,000, சீனியர் அசோசியேட் (Project Formulation) பணிக்கு ரூ.50,000 முதல் ரூ.70,000, ஆர்கிடெக் பணிக்கு ரூ.50,000, சைட் இன்ஜினியரிங்க பணிக்கு ரூ.40,000 மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற இணைதயளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Also Read: 8ம் வகுப்பு படித்தவரா? மாதம் ரூ.30,000 வரை சம்பளம்.. அரசு மருத்துவமனையில் சூப்பரா வேலை!

விண்ணப்பிக்க கடைசி நாள்

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20.10.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், நேர்காணல் குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?