5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TANGEDCO: டிப்ளமோ முடித்தவரா? தமிழக அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டென்னீசியன் டிப்ளமோ அப்ரசண்டீஸ், சிவில் பொறியியல், மெக்கானிக்கல் பொறியியல் போன்ற பதவிகளில் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TANGEDCO: டிப்ளமோ முடித்தவரா? தமிழக அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க
தமிழக மின் வாரியம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Jul 2024 16:35 PM

வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டென்னீசியன் டிப்ளமோ அப்ரசண்டீஸ், சிவில் பொறியியல், மெக்கானிக்கல் பொறியியல் போன்ற பதவிகளில் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை கீழ் கண்டவாறு பார்க்கலாம்.

மொத்தம் 500 பணியிடங்கள்:

  • எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் – 22
  • எலக்ட்ரானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியில் – 395
  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ஐமென்டேசன் பொறியியல் – 09
  • கம்யூட்டர்/தகவல் தொழில்நுட்பம் பொறியியல் – 09
  • சிவில் பொறியியல் – 15
  • மெக்கானிக்கல் பொறியியல் – 50

கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு பொறியியல் துறைகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். குறிப்பாக 2020,2021, 2022, 2023 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இது ஓராண்டுக்கு தொழில் பழகுநர் பயிற்சி ஆகும்.

Also Read: 30000 சம்பளம்.. சென்னை ஐஐடியில் வேலை.. முழு விவரம்!

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின்படி தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் தேர்வானவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.8000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • முதலில் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்த பிறகு Student என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
  • அதன்பின், Student Login என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது இமெயில் மற்றும் பாஸ்வோர்ட்டை புதிதாக உருவாக்க வேண்டும்.
  • பின்னர், Student Login ஆப்ஷனில் புதிதாக உருவாக்கப்பட்ட இமெயில் மற்றும் பாஸ்வோர்ட்டை உள்ளீட வேண்டும்
  • இதன்பின், விண்ணப்ப படிவம் தோன்றும். அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து Submit ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 30ஆம் தேதி கடைசி தேதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://nats.education.gov.in/ இந்த லிக்கை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

Also Read: பொதுத்துறை வங்கிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்..

Latest News