TN Govt Hospital Jobs: +2 முடித்தவரா? அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.20,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

அரசு மருத்துவமனையில் வேலை: தஞ்சாவூர் மாவட்டத்தில் சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணியிடத்திற்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்க்கலாம்.

TN Govt Hospital Jobs: +2 முடித்தவரா? அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.20,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

வேலைவாய்ப்பு (picture credit : Getty)

Updated On: 

13 Nov 2024 20:56 PM

சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும். மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணியிடத்திற்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்க்கலாம்

பணி விவரம்

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம்- தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றனர். மொத்தம் 3 இடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், ஆய்வக நுட்புநர், காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. 11 மாதங்கள் பதிவிக்காலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பணிக்கு மருத்துவ ஆய்வகங்கள் குறித்த பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கணினி குறித்த படித்தத்திற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு அனுபம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

ஆய்வக நுட்புநர் பணிக்கு மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் அல்லது அற்கு நிகரான படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. காசநோய் சுகாதார பார்வையாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது அறிவியல் பாடம் கொண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மருத்துவ துறையில் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read : டிகிரி முடித்தவரா? உள்ளூரிலேயே அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வயது வரம்பு

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிகளுக்கு கல்வித்தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பளம்

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.19,800 வழங்கப்படும். ஆய்வக நுட்புநர் பணிக்கு ரூ.13,000 வழங்கப்படும். காசநோய் சுகாதார பார்வையாளர் ரூ.13,300 மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க முறை

மேற்கண்ட பணிக்கு https://thanjavur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி மற்றும் தகுதி சான்றிதழ், கணினி சான்று, வாகன ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read :  தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. அரசு தரும் மாதம் ரூ.5,000… தகுதிகள் என்ன?

முகவரி

துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்),
மாவட்ட காசநோய் மையம்,
இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம்,
தஞ்சாவூர்

என்ற முகவரிக்கு 23.11.2024-க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள், சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், முழுமையான விபரங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!