Transport Job : தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலை.. 499 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!
Job Offer | தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கான 499 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கோவை, சென்னை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிறப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமன்றி இந்திய அளவில் வேலை வாய்ப்பின்மை ஒரு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. படித்த பட்டதாரி இளைஞர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவரும் வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பினையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அது முழுவதுமாக தீர்ந்த பாடில்லை. இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான சுமார் 499 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Bank Jobs: 1,497 காலிப் பணியிடங்கள்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. உடனே செக் பண்ணுங்க!
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 21 ஆம் தேதி கடைசி நாள்
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கான 499 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கோவை, சென்னை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிறப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 21 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : TNPSC Group 2 Result: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பொறியியல் பட்டதாரி பயிற்சி பணி
இந்த பொறியியல் பட்டதாரி பயிற்சி பணிக்கு மொத்தம் 201 காலிப்பணியிடங்கள் உள்ளன.
யார் யாருக்கு எவ்வளவு இடம்?
இதில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமைபைல் இன்ஜினியரிங்கிற்கு சுமார் 170 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிவில் இன்ஜினியரிங்கிற்கு 10 இடங்களும் கம்பியூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்கிற்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பம் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை
இந்த பணிக்கு மாதம் ரூ.9,000 வரை ஊக்கத்துகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : TN Govt Jobs: மாதம் ரூ.18,000 சம்பளம்.. உள்ளூரிலே பெண்களுக்கு அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
பட்டயப் பயிற்ச்சி
இந்த பணிக்கு மொத்தம் சுமார் 140 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
யார் யாருக்கு எவ்வளவு இடம்?
இதில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமைபைல் இன்ஜினியரிங்கிற்கு 125 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிவில் இன்ஜினியரிங்கிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கம்பியூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்கிற்கு 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வித் தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோமைபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை
இந்த பணிக்கு மாதம் ரூ.8,000 வரை ஊக்கத்துகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : TN Govt Jobs: தமிழில் எழுத படிக்க தெரியுமா? அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க!
பட்டதாரி பயிற்சி
இந்த பணிக்கு மொத்தம் சுமார் 158 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
TNSTC – கோயம்புத்தூர் மண்டலம் – 93
TNSTC – திருநெல்வேலி மண்டலம் – 53
SETC TN – சென்னை – 22
கல்வித் தகுதி
இந்த பணிக்கு விண்ணபிக்கும் நபர்கள் B.A., / B.com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும். இதில் ஒரு ஆண்டுக்கு பயிற்ச்சி அளிக்கப்படும் நிலையில், மாதம் ரூ.9,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதையும் படிங்க : Bank Jobs: டிகிரி போதும்… வங்கியில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?
மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பிறகு சம்மந்தப்பட்ட மண்டலங்களில் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.