TN Govt Jobs: 8ஆம் வகுப்பு படித்தவரா? உள்ளூரிலேயே அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் கோவையில் உள்ள மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். அந்த வகையில் தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் கோவையில் உள்ள மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.
பணி விவரம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை/ அரசு தலைமை மருத்துவமனை/ பொள்ளாச்சி/ மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை(ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகியவற்றின் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அதன்படி ஆடியோலாஜிட், டெண்டல் டெக்னீஷியன், ஆப்டோமெட்ரிஸ், அலுவலக உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தலா 1 இடங்களும, உதவியாளர் உடன் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், டேட்டா மேனேஜர், சாண்டரி அட்டண்டர், மருத்துவமனை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தலா 2 இடங்களும், ரேடியோகிராப்பர், ஆப்ரேஷன் தியேட்டர் உதவியாளர் ஆகிய பணிக்கு 3 இடங்களும், மருத்துவமனை ஊழியர் பணிக்கு 23 இடங்களும், பாதுகாப்பு காவலர் பணிக்கு 8 இடங்களும் நிரப்பப்படுகின்றது.
மேலும், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணிக்கு 5 இடங்களும், லாப் டெக்னீஷியன் பணிக்கு 9 இடங்களும், பல்துறை மருத்துவமனை ஊழியர் பணிக்கு 14 இடங்களும் என மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்படுகின்றது.
Also Read: அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.20,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கல்வித்தகுதி
பெரும்பாலான பணிகளுக்கு அதற்கு ஏற்ற பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியும், சாண்டரி அட்டண்டர், பாதுகாப்பு காவலர், மருத்துவமனை உதவியாளர், பல்துறை மருத்துவமனை உதவியாளர் ஆகிய பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சம்பளம்
ஆடியோலாஜிஸ்ட் பணிக்கு மாதம் ரூ.23,000, டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணிக்கு ரூ.13,500, சாண்டரி அட்டண்டர் பணிக்கு ரூ.8,500, பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ரூ.8,500, டேட்டா மேனேஜர் பணிக்கு ரூ.20,000, டெண்டல் டெக்னீஷியன் பணிக்கு ரூ.12,600, மருத்துவமனை ஊழியர் பணிக்கு ரூ.8,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை உதவியாளர் பணிக்கு ரூ.8,500, லாப் டெக்னீஷியன் பணிக்கு ரூ.13,000, அலுவலக உதவியாளர் பணிக்கு 10,000, ஆப்டோமெட்ரிஸ் பணிக்கு ரூ.14,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளுக்கான சம்பள விவரத்தை இதை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு
பெரும்பாலான பணிக்கு 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆப்டோமெட்ரிஸ் பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். டேட்டா மேனேஜர் பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆப்ரேஷன் தியேட்டர் பணிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணிகளுக்கு கல்வித்தகுதி, அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிகளுக்கு என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Also Read : பி.எஸ்.எஃப் ஆட்சேர்ப்பு 2024.. வெளியான அதிரடி மாற்றங்கள்!
அனுப்ப வேண்டிய முகவரி
உறுப்பினர் செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோவை – 18
மேற்கண்ட முகவரிக்கு வரும் டிசம்பர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.