5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரூ.1 லட்சம் வரை சம்பளம்! தமிழக அரசு வேலை..உடனே அப்ளை பண்ணுங்க!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பு குறித்த விவரத்தை இங்கே காணலாம்.

ரூ.1 லட்சம் வரை சம்பளம்! தமிழக அரசு வேலை..உடனே அப்ளை பண்ணுங்க!
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 01 May 2024 11:32 AM

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டி.என்.எம்.ஆர்.பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி, 2,553 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் –  2,553 பணியிடங்கள்

வயது வரம்பு:

இந்த பணியிடங்களுக்கு 1.07.24-ன் படி 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

கல்வித்தகுதி:

உதவி அறுவைச் கிசிச்சை நிபுணர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Madras Medical Act, 1914 மருத்துவராக பதிவு செய்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 12 மாதங்கள் House Surgeon (CRRI) பணிகாலம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்த பணியிடத்திற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, தனிப்பட்ட நேர்காணல், ஆவண சர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு https://www.mrb.tn.gov.in/  என்ற இணைதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு பொதுபிரிவினருக்கு ரூ.1000 ஆகவும் எஸ்சி/எஸ்சி பிரிவினருக்கு ரூ.500 ஆகவும் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி 15.05.24 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.mrb.tn.gov.in/pdf/2024/AS_Notification_150324.pdf இந்த லிக்கை க்ளிக் செய்யலாம்.