Temple Jobs : அறநிலையத்துறையில் வேலை.. மாதம் ரூ.60,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNHRCE Recruitment 2024: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பவானி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இந்த கோயிலில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே, இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பவானி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்க்கலாம்
பணி விவரம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, கோயிலில் அமைக்கப்பட உள்ள மருத்துவமனையில் மருந்துவ அலுவலர் பணிக்கு இரண்டு இடங்களும், செவிலியர் பணிக்கு 2 இடங்களும் நிரப்பப்படுகிறது. இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மருத்துவ அலுவலர் பணிக்கு எம்.பி.பி.எஸ் படித்திருக்க வேண்டும். அதோடு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து இருக்க வேண்டும். மேலும், செவிலியர் பணிக்கு பொது செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read : மாதம் ரூ.1 லட்சம் சம்பளம், எழுத்துத் தேர்வு இல்லை.. PNB வங்கியில் பணி!
வயது விவரம்
மேற்கண்ட இரண்டு பணிகளுக்குமே 35க்கு வயதிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மாத சம்பளம்
மருத்துவ அலுவலர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.60,000 வழங்கப்படும் என்றும் செவிலியர் பணிக்கு ரூ.14,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட பணிகள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மேலும், இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்தப்படுவார்கள் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்கு என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகலுடன் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை அறிய கோயிலுக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Also Read : டிகிரி முடித்தவரா? 760 காலிப் பணியிடங்கள்.. தமிழக அரசு வேலை!
அனுப்ப வேண்டிய முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில்,
பெரியபாளையம், ஊத்துக்குகோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் 601102
என்ற முகவரிக்கு ஜனவரி 20ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.