TNPSC: சூப்பர் அறிவிப்பு.. 2வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவது பொருட்டு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். பதவிகளின் வகைகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என நான்கு வகைகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படுவது வழக்கம். இப்படியான நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்கள் 2வது முறையாக அதிகரித்துள்ளது.

TNPSC: சூப்பர் அறிவிப்பு.. 2வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 Oct 2024 21:33 PM

டிஎன்பிஎஸ்சி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை 2வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவது பொருட்டு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். பதவிகளின் வகைகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என நான்கு வகைகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படுவது வழக்கம். இப்படியான நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்கள் 2வது முறையாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 6244 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 11 ஆம் தேதி கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது 2.208 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Also Read: Wagamon: 125 நாட்களுக்குப் பின்பு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த வாகமன் கண்ணாடி பாலம்!

கடந்த ஜூன் 9 ஆம்தேதி நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இதனை எழுத சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 15 லட்சம் பேர் தான் தேர்வு எழுதினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில முழுவதும் சுமார் 7, 247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் மட்டும் சுமார் 1.33 லட்சம் பேர் குரூப் 4 தேர்வில் எழுதியிருந்தனர். அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என  கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வு முடிவுக்காக காத்திருந்த தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் தான் காலி கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதன் மூலம் 6.244 ஆக இருந்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை 6,724 ஆக உயர்ந்தது. தற்போது 2வது முறையாக காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. வெளியான முக்கிய தகவல்!

இந்த குரூப் 4 பிரிவில் கிராம நிர்வாக அலுவலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், நேர்முக எழுத்தர் தனிச் செயலர், ஆய்வக உதவியாளர்,தட்டச்சர், வனக் காப்பாளர்,வரித்தண்டலர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், இளநிலை உதவியாளர், இளநிலை செயல் பணியாளர், வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர், பால் அளவையாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் என பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 6244 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

போட்டித்தேர்வான குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு அதிகபட்ச வயது 42 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர், தொலைபேசி இயக்குபவர், வரவேற்பாளர் வரையும்,  தண்டலர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், ஆகிய பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம் 37 ஆகவும் பிற பிரிவினருக்கு 34 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?