TNPSC Group 2 Result: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி: டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. நடப்பாண்டு குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

TNPSC Group 2 Result: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி (picture credit: Getty)

Published: 

27 Sep 2024 18:03 PM

டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.  தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, தமிழ்நாடு அரசுத் துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப் 2ஏ பதவிகளில் 1,820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு:

இதற்காக குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி அரசு துறையில் காலியாக பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப் 2ஏ பதவிகளில் 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த காலிப்பணியிடங்களுக்கு தேர்வும் நடத்தப்பட்டது.

Also Read: டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்.. விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு செய்ய முடிவு..!

நடப்பாண்டு குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறற்றது. தமிழகத்தில் 2,763 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இதற்கு 7,93,966  விண்ணப்பித்திருந்த நிலையில், முதல்நிலைத் தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த நிலையில்,  குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?

அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் டிசம்பவம் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், குரூப் 2 முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது.

பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் பொதுஅறிவுக்கான உத்தேச விடைகள் (Tentative Key) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள், அதாவது 30.09.2024 மாலை 5.45-க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள Answer Key Challenge என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம்.

இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) வழங்கப்பட்டுள்ளன என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.  அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறப்பட்டிருந்தது.

Also Read; குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியிருக்கீங்களா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே பாருங்க!

மேலும், மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளை அதன் வரிசை எண் அடிப்படையிலேயே தேர்வர்கள் தங்கள் மறுப்பை தெரிவிக்க வேண்டும். இதனை செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் இணைய வழியில் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?