TNPSC Group 4 2024 Result : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வு முடிவுகள் வெளியானது.. இணையதளம் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?
Exam Result | கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வில் 7,247 மையங்களில் சுமார் 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து 5 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேர்வர்கள் தேர்வு முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 8,932 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வில் 7,247 மையங்களில் சுமார் 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து 5 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேர்வர்கள் தேர்வு முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், இன்று (அக்டோபர் 28) வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் எப்படி தெரிந்துக்கொள்ளலாம் என விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: வரும் 1 ஆம் தேதி 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. எங்கே தெரியுமா?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வு முடிவுகள்
ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 4 தேர்வு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு அரசு பணிகளில் 6,244 இடங்கள் காலியாக இருப்பதாக அரசு அறிவித்தது. பிறகு, மீண்டும் அந்த காலி பணியிடங்களை உயர்த்தி அறிவித்தது. அதாவது அரசு துறைகளில் மொத்தம் 8,932 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், மாநிலம் முழுவதும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. வெறும் 8,932 பணியிடங்களுக்கு சுமார் 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த 5 மாதங்கள் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்தனர்.
இதையும் படிங்க : Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
இதற்கிடையே இன்னும் இரண்டு நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் எளிதாக தெரிந்துக்கொள்வது எப்படி என விரிவாக பார்க்கலாம்.
தேர்வு முடிவுகளை இணையத்தில் தெரிந்து கொள்வது எப்படி?
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள முதலில் www.tnpscresults.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- இணையதளத்திற்கு சென்ற உடன் தேர்வு பதிவு எண்ணை அதில் பதிவிட வேண்டும்.
- பதிவு எண்ணை பதிவிட்ட உடன் பிறந்த தேதியை பதிவிட வேண்டும்.
- பிறகு அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சாவை பதிவிட வேண்டும்.
- அனைத்து தகவல்களையும் சரிபார்த்துவிட்டு Submit கொடுட்ட வேண்டும்.
- இதற்கு பிறகு உங்களது தேர்வு முடிவுகள் திரையின் முன்பு தோன்றும்.
மேற்கண்ட இந்த முறையை பின்பற்றி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை சுலபமாக இணையத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
தேர்வு முடிவுகளை இணையத்தில் தெரிந்து கொள்ள மற்றொரு வழி
மேற்குறிப்பிட்ட முறையை தவிர மேலும் ஒரு வகையிலும் இணையத்தில் என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
- அதற்கு முதலில் www.tnpscexams.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Group 4 Results-ஐ கிளிக் செய்யுங்கள்.
- பிறகு உங்களது தேர்வு பதிவு எண்ணை பதிவிடுங்கள்.
- தேர்வு பதிவு எண்ணை பதிவிட்ட பிறகு உங்கள் பிறந்த தேதியை பதிவிடுங்கள்.
- இதற்கு பிறகு அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சாவை பதிவிடுங்கள்.
- அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு Submit செய்யுங்கள்.
இதையும் படிங்க : Diwali Special Bus: இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. சென்னை மக்கள் எங்கு செல்ல வேண்டும்?
மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலமும் மிக சுலபமாக இணையதளம் மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.