5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TNPSC வெளியிட்ட செம்ம அறிவிப்பு.. டிகிரி முடிச்சவங்க மிஸ் பண்ணாதீங்க!

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது.  அதாவது, 118 காலியாக இருப்பதாகவும்,  ஜூன் 16ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர், முதுநிலை அலுவலர், உதவி மேலாளர், தமிழ் நிருபர், ஆங்கில நிருபர் என 118 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC வெளியிட்ட செம்ம அறிவிப்பு.. டிகிரி முடிச்சவங்க மிஸ் பண்ணாதீங்க!
டி.என்.பி.எஸ்.சி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 May 2024 14:11 PM

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது.  அதாவது, 118 காலியாக இருப்பதாகவும்,  ஜூன் 16ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர், முதுநிலை அலுவலர், உதவி மேலாளர், தமிழ் நிருபர், ஆங்கில நிருபர், கணக்கு அலுவலர், கணக்கு உதவி மேலாளர், துணை மேலாளர், நிதி உதவி மேலாளர், உதவி பொது மேலாளர், புள்ளியில் உதவி இயக்குநர், நிதியாளர், உதவி இயக்குநர் (நகர் மற்றும் ஊரமைப்பு), உதவி இயக்குநர் (சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை) உள்ளிட்ட 118 இடங்களில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : Tamilnadu Weather: 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்… கவனம் மக்களே.. வானிலை மையம் எச்சரிக்கை!

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு அந்த பணிகளுக்கு ஏற்றாவறு கல்வித்தகுதி மாறுப்படும்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுககு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தர பதிபு வைக்காதவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

நிரந்தர பதிவுக் கட்டம் 150 ரூபாயும், எழுத்துத் தேர்வு கட்டணம் 100 ரூபாயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரபதிவில் பதிவு செய்ய வேண்டும். இந்த நிரந்தர பதிவு 5 வருடங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன்பிறகு, உரிய பதிவுக் கட்டணத்தை செலுத்தி புதுப்பித்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 14 ஆம் தேதி இரவு 11.59 மணி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜூன் 19ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஜூன் 21ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதிகள்:

Tamil Eligibility test, General Studies, Aptitude And Mental Ability Test தேர்வு 28.07.2024 அன்று காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. அதேபோல, Basics Of Engineering, Agriculture, Home Science, Statistics தேர்வு 12.08.24 முதல் 16.08.24 வரை நடைபெறுகிறது.

தேர்வு மையங்ககள்:

இந்த பணியிடங்களுக்கான தேர்வு சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்!