TNPSC Recruitment 2024: அரசு வேலை.. கை நிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் பல்வேறு காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். இந்த நிலையில், ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு பொதுப் பணியில் உள்ள இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் பணி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் பல்வேறு காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். இந்த நிலையில், ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு பொதுப் பணியில் உள்ள இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் பணி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. குற்ற வழக்கு தொடர்பு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை -11 பதிவிக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 51 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை கீழ் கண்டவாறு பார்ப்போம்.
பணி விவரம்:
குற்ற வழக்கு தொடர்புடைய அரசு உதவி வழக்கு நடத்துனர் நிலை – 11 பதவி நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு 51 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
Also Read: ஐடிஐ மாணவர்களே.. உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி வேண்டுமா?
கல்வித்தகுதி:
- மேற்கண்ட பணியிடத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டத்தில் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வழக்கறிஞர் சங்கத்தில் கட்டாயம் உறுப்பினராக இருப்பதோடு, குற்றவியல் நீதிமன்றத்தில் முனைப்புடன் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் கட்டாயம் வழக்கு நடத்தியவராக இருக்க வேண்டும்.
- போதிய தமிழ் அறிவு உடையவராக இருக்க வேண்டும், தமிழ் மொழி வழியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பள்ளியில் தமிழ் மொழி பாடத்தை ஒரு மொழிப்பாடமாக கற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 26 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது. எஸ்சி,எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடத்திற்கு முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதல்நிலைத் தேர்வு தகுதி தேர்வாகும். முதன்மை மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
தேர்வு நாள்:
இந்த பணியிடத்திற்கு முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படுக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்த பின் இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருந்தால் அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
Also Read: இந்து அறநிலையத்துறையில் சூப்பர் வேலை.. 8ஆம் தேர்ச்சியே போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!
முக்கிய நாட்கள்:
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டேபர் 12ஆம் தேதி இரவு 11.59 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அக்டோபர் 16ஆம் தேதி பகல் 12.01 முதல் 18ஆம் தேதி இரவு 11.59 வரை திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.