TNPSC Recruitment: அரசு வேலை.. 654 காலி பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

டிஎன்பிஎஸ்சி: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் பல்வேறு காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். இந்த நிலையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 654 டெக்னிக்கல் சர்வீஸ் பணியிடங்களுக்கு நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Recruitment: அரசு வேலை.. 654 காலி பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

டிஎன்பிஎஸ்சி

Updated On: 

27 Jul 2024 19:49 PM

டிஎன்பிஎஸ்சி: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் பல்வேறு காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். இந்த நிலையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 654 டெக்னிக்கல் சர்வீஸ் பணியிடங்களுக்கு நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பொறியாளர், புவியியலாளர், வேதியியலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

உதவி இன்ஜினியர், விவசாய அதிகாரி, உதவி இயக்குநர், உதவி புவியியலாளர், வேதியலாளர், மருந்து ஆய்வாளர், ஜூனியர் ஆர்க்கிடெக்ட், கியூரேட்டர், ஆராய்ச்சி உதவியாளர், புள்ளியில் ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர், மொழி பெயர்ப்பாளர், நூலக உதவியாளர், நூலகர், தொழில்நுட்ப நிர்வாகி, செயல் அளவையர், செயல் நிலத்தியலாளர், செயலக அலுவலர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தேர்வே இல்லாமல் ரயில்வேயில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்.. மிஸ் பண்ணாதீங்க!

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கு வெவ்வேறு கல்வித்தகுதிகள் உள்ளன. எனவே, அறிப்பானையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு அரசு ஊதிய அடிப்படையில் நிலை 8 முதல் 20 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு தாள் ஒன்று, இரண்டு என தேர்வுகள் நடைபெறும். முதல் தாளில் தமிழ் தகுதித் தேர்வும், தாள் இரண்டில் பொது அறிவு தேர்வு நடைபெறும். தாள் ஒன்று அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறுகிறது. தாள் இரண்டு தேர்வு அக்டோபர் 14 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு விடுக்கப்படும். இதன்பின் நேரில் சான்றிதழ் பார்ப்புக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பதவிகளுக்கு நேர்காணல் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு  https://www.tnpsc.gov.in/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 24.08.24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் திருத்தம் செய்ய 28.08.24 முதல் 30.08.24-க்குள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: டிகிரி முடித்தவர்களா? மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!