5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TNHRCE Recruitment 2024 : அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Job Offer | தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் காலி இடங்கள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதன்படி, மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டது. மருத்துவ பணியாளர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தலா இரண்டு பேர் என மொத்த 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 

TNHRCE Recruitment 2024 : அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
குலசேகர முத்தாரம்மன் கோயில்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 04 Oct 2024 13:11 PM

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகர முத்தாரம்மன் கோயிலில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ளது. இந்த கோயிலில் தற்போது புதிதாக மருத்துவ மையம் அமைக்கப்பட உள்ளது. எனவே, இதற்கு ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக இந்து சமய நிலையத்துறை வெளியிட்டுள்ளது. எனவே, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் நிறைவடைகிறது.

பணி விவரம்:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் காலி இடங்கள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதன்படி, மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டது. மருத்துவ பணியாளர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தலா இரண்டு பேர் என மொத்த 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : Transport Job : தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலை.. 499 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

கல்வித்தகுதி:

மருத்துவ அலுவலர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மருத்துவராக பணிபுரிந்தற்கான அனுபவம் இருக்க வேண்டும். செவிலியர் பணிக்கு DGNM முடித்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று அறவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்த மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். செவிலியர் பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பல்நோக்கி மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 40 வயது வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

மருத்துவ அலுவலர் பணிக்கு மாதம் ரூ.60,000 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செவிலியர் பணிக்கு மாதம் ரூ.14,000 சம்பளமாக வழங்கப்படும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.6000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Bank Jobs: 1,497 காலிப் பணியிடங்கள்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. உடனே செக் பண்ணுங்க!

தேர்வு செய்யப்படும் முறை:

இந்து சமய அறநிலையத்துறையில் கீழ் செயல்படும் கோயிலில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இதன் அடிப்படையில் அவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

நிபந்தனைகள்:

  • இந்த  பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ் நாட்டை சார்ந்தவாரகவும் இருக்க வேண்டும்.
  • இதற்கு தொற்று நோய் உடல் அல்லது மன நலம் குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இதேபோல நீதிமன்றம் மூலம் தண்டை பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியாது.
  • மேலும், அரசு பணிகள் பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்
  • இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நன்னடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழில் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்காள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்வுக்கு அனுப்பப்படும்.
  • இந்த பணிகளுக்கான நேரடி நியமனம் இந்து சமய அற நிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை.
  • இந்த பணிக்கு விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்று அலுவலர் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்ப்ட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூட்து என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்து சமய அறநிலையத்துறை அறி

வித்துள்ள இந்த பணியிடங்களுக்கு https://tamilnadurecruitment.in/organization/tnhrce/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து தபால் மூலம் அனுப்ப
வேண்டும்.

இதையும் படிங்க : TNPSC Group 2 Result: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலகர்,
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரப்பட்டினம்,
திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம் – 628206

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மேற்கண்ட முகவரிக்கு நாளை (05.10.2024) மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News