5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தேர்வு இன்றி சூப்பர் வேலை! மாதம் ரூ.15,000 சம்பளம்..அழைக்கும் திருச்சி என்.ஐ.டி!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேர்வு இன்றி சூப்பர் வேலை! மாதம் ரூ.15,000 சம்பளம்..அழைக்கும் திருச்சி என்.ஐ.டி!
என்.ஐ.டி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 27 Apr 2024 17:46 PM

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் என்.ஐ.டி எனும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, திருச்சி என்.ஐ.டியில் ஒரு காலி பணியிடங்கள் இருப்பதாகவும், தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

Welding Material Testing – 01 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு வயது வரம்பு எதுவும் குறிப்பிடவில்லை.

சம்பளம்:

இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதல் 6 மாதம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு, அவர்களின் செயல்பாட்டை பொறுத்து அடுத்தடுத்து 6 மாதங்கள் என்ற அடிப்படையில் பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.  தற்காலிகமாக நிரப்பப்படும் இந்த பணியிடத்திற்கு மாத சம்பளம் ரூ.15,834 வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

கல்வி சான்றிதழ், பணி அனுபவம் நகலை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

Dr.T Ramesh/Dr.N. Siva Shanmugam,
Professor,
Department of mechanical engineering,
National Institute of Trichirappali
Thuvakudi – 620015

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2024

நேர்காணல் தேதி: மே 23ஆம் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த https://www.nitt.edu/ லிக்கை கிளிக் செய்ய வேண்டும்.