TN Government Jobs: 10ஆம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.25,000 சம்பளம்.. உள்ளூரிலே அரசு வேலை! - Tamil News | tuticorin goverment jobs 3 vaccancies in librarian public relation department check the eligibility salary and other details in tamil | TV9 Tamil

TN Government Jobs: 10ஆம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.25,000 சம்பளம்.. உள்ளூரிலே அரசு வேலை!

Tuticorin Jobs: தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணிமண்டபங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.

TN Government Jobs: 10ஆம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.25,000 சம்பளம்.. உள்ளூரிலே அரசு வேலை!

அரசு வேலை

Updated On: 

13 Oct 2024 13:01 PM

தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட வாரியாக காலியாக உள்ள அரசு துறைகளில் அவ்வப்போது பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு பகுதியில் உள்ள வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கவர்ணகிரி பகுதியில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் மண்மண்டபம், கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோள் மணிமண்டபம் ஆகிய மணிமண்டபங்களில் காலியாக உள்ள நூலகர், காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.

பணி விவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட மணிமண்டபங்களில் காலியாக உள்ள நூலகர், காப்பாளர் (Librarian Cum Caretaker) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் மூன்று காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. வல்லநாடு, கவர்ணகிரி, கட்டாலங்குளம் மணிமண்பங்களில் காலியாக உள்ள நூலகர், காப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library And Information Science படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 அன்றுள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும், BC பிரிவினர் 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். MBD பிரிவினர் 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி பிரிவினர் 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 3,000 காலிப் பணியிடங்கள்.. உள்ளூரிலே அரசு வேலை!

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு படிப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எந்த ஒரு தேர்வும் கிடையாது. மேலும், வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டப பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு முன்னுரிமையற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டப பணிக்கு ஆதிதிராவிடர் முன்னுரிமையற்றவர் என்றும், வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்ட பணிக்கு பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லீம்கள் தவிர) முன்னுரிமையற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு https://thoothukudi.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவ தகுதி, சாதி சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பமீட்டு பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் மணிமண்டபத்தின் பெயரை குறிப்பிட்டு உரிய சான்றிதழ் நகலுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Also Read: மாதம் ரூ.5,000.. இளைஞர்களுக்கு சூப்பரான வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

அனுப்ப வேண்டிய முகவரி:

செய்து மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
தூத்துக்குடி மாவட்டம் – 628101

என்ற முகவரிக்கு 18.10.2024 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...
நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?