Bank Jobs: டிகிரி போதும்.. மாதம் ரூ.80,000 சம்பளம்… வங்கியில் சூப்பரான வேலை!

Union Bank Recruitment 2024: பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

Bank Jobs: டிகிரி போதும்.. மாதம் ரூ.80,000 சம்பளம்... வங்கியில் சூப்பரான வேலை!

வங்கியில் வேலை

Published: 

02 Nov 2024 12:21 PM

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் காத்திருக்கின்றனர். இந்த சூழலில், பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பணி விவரம்:

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. யூனியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பணிகளுக்கு 1,500 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 200 இடங்களும், கேரளாவில் 100 இடங்களும், கர்நாடகாவில் 300 இடங்களும், ஆந்திராவில் 200 இடங்களும், தெலங்கானாவில் 200 இடங்களும், அசாமில் 50 இடங்களும், குஜராத்தில் 200 இடங்களும், மகாராஷ்டிராவில் 50 இடங்களும், ஒடிசாவில் 100 இடங்களும், மேற்கு வங்கத்தில் 100 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

Also Read: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

கல்வித்தகுதி:

உள்ளூர் வங்க அதிகாரி (LBO) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

உள்ளூர் வங்கி அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் 30 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பளம்

மேற்கண்ட பணிக்கு மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்கு எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், மொழி திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்திற்கு சென்று என்பதை க்ளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும், ஆவணங்கள், புகைப்படங்களை உள்ளீட்டு விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.850, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வு முடிவுகள் வெளியானது.. இணையதளம் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

முக்கிய தேதிகள்

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நவம்பர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?