மத்திய ஆயுதப்படையில் வேலை.. டிகிரி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க! - Tamil News | | TV9 Tamil

மத்திய ஆயுதப்படையில் வேலை.. டிகிரி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Published: 

08 May 2024 13:14 PM

UPSC Recruitment 2024: மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மத்திய ஆயுதப்படையில் வேலை.. டிகிரி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!
Follow Us On

மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 14ஆம் தேதி கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

எல்லை பாதுகாப்பு படை (BSF) – 186
மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) – 120
மத்திய தொழிலக காவல்படை (CISF) – 100
சிறப்பு சேவை பணியகம் (SSB) – 42
இந்தோ திபெத்திய எல்லைக் காவல்படை (ITBF) – 58

பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை – 506

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

2024 ஆகஸ்ட் 1-படி விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடைப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு https://upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து பிரிவி பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாகிள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. எஸ்பிஐ வங்கியின் மூலமாகவோ அல்லது ரூபே, விசா,மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், இணையவழி வங்கி பிரிமாற்றம், யுபிஐ மூலமாக கட்டணத்தை செலுத்தலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2024 மாலை 6 மணி வரை

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 04.08.2024

 

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version