ஒரே நாடு ஒரே சந்தா திட்டம் என்ன? எத்தனை கோடி மாணவர்கள் பயன்பெறுவார்கள்?

One Nation One Subscription: ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்துக்கு மத்திய அரசு திங்கள்கிழமை (நவ.24, 2024) ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் என்றால் என்ன? இதன் மூலம் எத்தனை கோடி மாணவர்கள் பயன்பெறுவார்கள்?

ஒரே நாடு ஒரே சந்தா திட்டம் என்ன? எத்தனை கோடி மாணவர்கள் பயன்பெறுவார்கள்?

ஒரே நாடு ஒரே சந்தா திட்டம்

Published: 

27 Nov 2024 12:47 PM

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் இதழ் வெளியீடுகளுக்கான மையப்படுத்தப்பட்ட அணுகலுக்கான ஒரே நாடு ஒரே சந்தா (One Nation One Subscription -ONOS) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை (நவ.24, 2024) ஒப்புதல் அளித்தது. மேலும், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. இதன் மூலம், மத்திய அல்லது மாநில அரசுகளின் கீழ் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களும் இதற்கான பலன்களை பெறலாம்.

தேசிய சந்தா திட்டம்

ஒ.என்.ஒ.எஸ் என்பது முக்கிய கல்வி இதழ்கள் மற்றும் பிற ஒத்த வெளியீடுகளுக்கு ஆராய்ச்சியாளர்களின் சந்தாக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டமாகும்.
அதாவது, இது, நடைமுறைக்கு வந்ததும், இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிகை கட்டுரைகளுக்கான அணுகலும் ஒரே திட்டத்தில் கிடைக்கும்.

முன்னதாக, ஆகஸ்ட் 2023 இல் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அப்போதைய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்த சுபாஸ் சர்க்கார், 2022 இல் ஜர்னல் சந்தாக்களுக்காக இந்திய அரசாங்கம் சுமார் ரூ.995 கோடி செலவிட்டதாக பதிலளித்தார்.
மேலும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் நிதியளிக்கப்பட்ட நூலகக் கூட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட அரசாங்க கல்விக்கு இந்த சந்தாக்கள் பயன்படுத்தப்படும் என்றார்.

தொடர்ந்து, இதற்கு, 2019-2022 ஆம் ஆண்டிற்கான மொத்தச் செலவு சுமார் ரூ.2 ஆயிரத்து 985 கோடியாக இருக்கும் என்றும் அமைச்சர் சர்க்கார் கூறினார்.
அதாவது தேசிய சந்தா திட்ட முன்முயற்சி திறந்த அணுகல் இதழ்களில் தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்கு ஆசிரியர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களில் சலுகைகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஆர்.ஆர்.பி டெக்னீஷியன் கிரேடு 3 பணி.. விண்ணப்பத்தை சரிபார்ப்பது எப்படி?

தேசிய சந்தா திட்டத்தின் வரலாறு

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கை-2020 கருப்பொருள் நோக்கங்களில் ஒன்றாக ஒஎன்ஒஎஸ் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், இந்தத் திட்டம் ஆகஸ்ட் 2021-இல் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகத்தின்படி, பத்திரிகைகள் மற்றும் மேற்கோள் தரவுத்தளங்களை உள்ளடக்கிய 41 வெளியீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் பிரபலமான அறிவியல் இதழ்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இதற்கான குழுவில் கல்வி அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளரும், அறிவியல் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை கோடி மாணவர்கள் பயன்பெறுவார்கள்?

இந்த தேசிய சந்தா முயற்சியானது அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் உள்ளவர்கள் உட்பட அனைத்து துறைகளின் கிட்டத்தட்ட 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன் நேஷன் ஒன் சந்தாவில் மொத்தம் 30 முக்கிய சர்வதேச பத்திரிகை வெளியீட்டாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வெளியீட்டாளர்களால் வெளியிடப்படும் கிட்டத்தட்ட 13,000 ஆன்லைன் இதழ்களை அணுக முடியும்.

எப்போது தொடங்கும்?

இந்த தளம் ஜனவரி 1, 2025 முதல் செயல்படத் தொடங்க உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான முற்றிலும் டிஜிட்டல் செயல்முறையாக இது இருக்கும்.

இதையும் படிங்க : கல்லூரி பேராசிரியர் ஆக விருப்பமா? இந்த அறிவிப்பு உங்களுக்குதான்!

ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.
நடிகை சோபிதா துலிபாலாவின் சினிமா பயணம்..!
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...