5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பெண் எம்.பிக்கே இப்படியா? இரவில் நடந்த கொடூர சம்பவம்.. என்னாச்சு?

ஆஸ்திரேலிய நாட்டின் எம்.பி பிரிட்டானி லாகா பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் எம்.பிக்கே இப்படியா? இரவில் நடந்த கொடூர சம்பவம்.. என்னாச்சு?
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 07 May 2024 09:36 AM

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த  பிரிட்டானி லாவ்கா,  குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து சுகாதார துறைக்கான துணை மந்திரியாக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஆஸ்திரேலிய எம்.பி பிரிட்டானி லாகா, கடந்த வார இறுதியில் மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள யெப்பூனில் போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாலை நடந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை உதவி மந்திரி லாகா காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் நடந்த சோதனையில் நான் உட்கொள்ளாத மருந்துகள் என் உடலில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் வெளியே சென்ற ஆஸ்திரேலிய எம்.பியை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த துயர செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பதிவில் இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். எங்களில் பலருக்கு இதுபோன்ற சோகம் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளார். என்னுடைய உடலில் போதை பொருள் கலந்திருந்தது என்பது மருத்துவமனையில் நடந்த பரிசோதனை முடிவில் உறுதியானது. ஆனால், அவற்றை நான் எடுத்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

Also Read: T20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு

இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். என்னை தொடர்பு கொண்டு பேசிய பிற பெண்களுக்கும் கூட மயக்க மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது சரியல்ல. நம்முடைய நகரில் மயக்க மருந்து கொடுப்பது அல்லது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்ற ஆபத்து இல்லாமல், நாம் மகிழ்ச்சியாக சமூகம் சார்ந்த செயல்களில் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

குயின்ஸ்லாந்து பிரீமியர் ஸ்டீவன் மைல்ஸ், பிரிட்டானி லாகாவுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் ஆதரவை வழங்குகிறது என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய வாரங்களில், ஆஸ்திரேலியாவில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளன.  ஆஸ்திரேலிய எம்.பி லாகா தாக்குதலுக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், தனது பேஸ்புக் பதிவில், லாகா தனது தனியுரிமையை மதிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.  மேலும் சம்பவத்திற்குப் பிறகு “உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் குணமடைய நேரம் எடுப்பதாகவும், “என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Latest News